480 என்றும் தேவசேனாபதியாக இரு என் பெண் தேவசேனை உன்னை கொண்டிருக்கிறாள். அவளை நீ திருமண கண்டு நீ செய்த உபகாரம் எங்களுக்கு நினை தருக்கு அடையாமல் இருப்போம்" என்று கொண்டான். முருகன் அவன் விருப்பத்தை ஏற்றுக் வேண்டும். என்றுமே தேவசேனாபதியாக விது தேவயாளை வருதல் இந்திரன் தன்னுடைய மகளை மனத்தில் நினைத்தான். காய்ந்திடு தம்பகை கடந்து பொன்னகர் வேந்தியல் முறையருள் வேற்கை வீரற்குக் கூந்தலஞ் சிறுபுறக் குஞ்ச ரந்தனை ஈத்திட மகபதி இதயத் தெண்ணினான். (தெய்வயானை திருமணம். 1. (கடந்து - வென்று. பொன்னகர் வேந்து இயல் - தேவலோகத்துக்கு அரசாகு இயல்கை முறை அருள் - முறையாக அருளிய. கூந்தல் அம் சிறுயுதக் குஞ்சரம் கூந்தல் தாழும் சிறிய முதுகையுடைய தேவயானையை. மகபதி - இந்திரன்.] ஓர் ஒற்றளை அனுப்பி இந்திராணியையும், புதல்வி தேவசேனை யையும் அழைத்துவரச் செய்தான். மற்றது போழ்தினின் மகத்தின் செம்மலோர் ஒற்றனை நோக்கியே ஒல்லை மேருவாம் பொற்றையில் மனைவியைப் புதல்வி தன்னுடன் இற்றையில் விளித்தனை ஏகுநீ என்றான். (தெய்வயானை. 5.) [மகத்தின் செம்மல் - இந்திரள். ஒல்லை - விரைவில், பொற்றையில் - மலையில் இற்றையில் - இன்று. விளித்தனை ஏகு - அழைத்து வா.] அந்த இரண்டுபேரும் வந்து முருகப் பெருமானை வணங்கினார்கள். இந்திராணி தேவர்களை எல்லாம் பார்த்தாள். அந்தத் தேவர்கள் கூட்டத்திலே சயந்தன் இருந்தான். அவனைப் பார்த்த வுடன் இந்திராணிக்கு அளவிலா ஆனந்தம் உண்டாயிற்று. பல காலம் பிரிந்திருந்த தன் மகனைக் கண்டவுடனே அவனை மகிழ்ச்சி யுடன் தழுவிக் கொண்டாள்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/500
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை