பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வயானை திருமணம் முசுகுந்தன் வரலாறு 485 எல்லோரும் போல முசுகுந்த சக்கிரவர்த்தியும் முருகப் பெருமா னுடைய திருமணத்திற்கு வந்தான். அதைக் கச்சியப்பர் விரிவாகச் சொல்கிறார். முசுகுந்தன் கரூரில் இருந்து ஆண்டவன். அவன் குரங்கு முகம் உடையவன். ஒரு நாள் சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்தில் வில்வ மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். குரங்குகள் அங்கே வந்தன. கல்லருவி தூங்குகயி லைப்பொழிலின் மேனாள் அல்லுறழ் மிடற்றவனும் அம்பிகையு மாக எல்லையின் மகிழ்ச்சியொ டிருப்பமுசு ஈட்டம் வில்லுவ மரந்தொறும் வியன்கிளையில் உற்ற. (தெய்வயானை. 32.) [கல் அருவி தூங்கு - பாறையில் அருவி விழும். அல் உறழ் மிடற்றவன் இருளை ஒத்த நீலகண்டனாகிய சிவபெருமான். மூச ஈட்டம் - குரங்குக் கூட்டம்.] கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்த குரங்குகளில் ஒன்று இருவரும் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு நேரே இருந்த கிளையில் அமர்ந்து ஒவ்வொரு வில்வ இலையாகப் பறித்துப் போட்டது. அப்படி அது உட்கார்ந்திருந்தது எப்படி இருந்தது என்றால் முனிவர்கள் முள்காந்திருந்ததைப் போல இருந்ததாம். முற்றுணர் கருத்தின்முனி வோர்கள்என முன்காந் துற்றிடு முசுக்கலையுள் ஒன்றிருவர் மீதும் மற்றெருவில் வத்திலை வரம்பில பறித்துத் துற்றிடுவ தென்னநனி தூர்த்துளதை யன்றே. (தெய்வயாளை.33.) - (முள்காந்து -உட்கார்ந்து. முகக்கலை - ஆண் குரங்கு. மற்று : அசை. துற்று இடுவது என்ன - நெருங்கும்படி போடுவது போல. தூர்த்துனது கீழே போட்டது. ஐ: சாரியை அன்று, ஏ : அசை நிலைகள்.] முள்கார் தல்-உட்கார்தல். "முகப்போல முள் காந்திருப்பார்' என்று முனிவர்களைப் பற்றி ஒரு பாடல் இருக்கிறது. கையையும், காலையும் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நிலை அது. சும்மா எங்கும் தாவித் தாவிப் பாய்ந்து, ஒரு கணமும் இருக்காத குரங்கு அந்த இடத்தில் முனிவர்களைப் போல இருந்தது.