பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 கந்தவேள் கதையரு திற்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால் பழைய காலத்தி எல்லோருக்கும் தெரிந்ததையே சொல்வார்கள். யாப்பிலக்கணத்தி சீர்களுக்கு வாய்பாடு சொல்கிறபோது, "தேமா, புளிமா,கூவிளம் கருவிளம் என்ற தொடர்கள் வருகின்றன. இனிய பழத்தைத் தருகின்ற மா தேமா. புளிப்பாக இருக்கும் காயைத் தருவது புளிமா. கருவிளம் என்பது விளாம்பழம். கூவிளம் என்பது எல்லோருக்கும் தெரிந்த வில்வம். யாப்பிலக்கணத்தில் கூவிளம் என்பது நேர்நிரை என்ற ருக்கு வாய்பாடாக வருவதால், எல்லோருக்கும் வில்வம் தெரியும் என்று தெரிகிறது. வில்வம் தெரியும் என்றால் அது சிவார்ச்சகைக் குப் பயன்படும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். பல பேர் வில்வத்தினாலே சிவபெருமானை அருச்சனை செய்து வந்தார்கள் என்று ஊகித்துக் கொள்ளலாம். திருப்பதியில் வேங்கடாசல் பதிக்கு வெள்ளிக்கிழமை தோறும் வில்வ அருச்சனை நடக்கிறது. அவ்வளவு உயர்ந்தது வில்வம். குரங்கின் வேண்டுகோள் நீ போய்ச் சக்கரவர்த்தியாக அர்சாட்சி செய்வாய்" என்று சிவபெருமான் சொன்னதைக் கேட்ட குரங்கு மகிழ்ச்சி அடைய வில்லை. நமக்கெல்லாம் சிறிய பதவி கிடைத்தாலும் உடனே மகிழ்ச்சி அடைவோம். பதவி கிடைக்காதா என்று ஏங்கிக்கொண் டிருப்போம். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கூட மேலும் பதவி உயர்வு வேண்டும் என்று எண்ணிக் காரியங்களைச் செய்துகொண்டி ருக்கிறார்கள். அந்தக் குரங்கோ சாமானியக் குரங்காக இருந்தால் அதை ஏற்றுக்கொண்டிருக்கும். அது வாலறிவு பெற்ற குரங்கு. ஆகவே அந்தக் குரங்கு சொல்லிற்று: "எம்பெருமானே, இதுவரைக் கும் நான் உங்கள் சமீபத்திலேயே இருந்துகொண்டு நாள்தோறும் உங்களைத் தரிசித்து வந்தேன்: மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தேன். இந்த இடத்தை வீட்டு நான் பூவுலகத்திற்குச் சக்கரவர்த் தியாகப் போனால் என் மனம் எப்படி மாறுமோ? பதவியும் செல்வமும் மனத்தை மாற்றிவிடுமே! நல்ல எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் போகுமே அத்தகைய செல்வ வலையில் பட்டால் நான் உஜ்ஜீவனம் பெற முடியுமா? இப்படி நாள்தோறும் மிகவும்