492 கந்தவேள் கதையமுதம் அதனால்தான் இந்த நாட்டில் தர்மம் செய்ய வேண்டுமென்று அடிக்கடி சாத்திரங்கள் வற்புறுத்துகின்றன. f சத்யம் வத, தர்மம் சர . என்று வேதம் சொல்கிறது. "அறம் செய விரும்பு" என்று பாட்டி, சிறு குழந்தைகள் படிக்கும் ஆத்திசூடியில் சொல்கிறாள். மகாத்மா காந்தி அடிகளும் செல்வம் வைத்திருக்கிறவர்கள் தர்ம கர்த்தா மாதிரி அதனை வைத்திருக்க வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார். அப்படி யில்லாமல் நாம் அநுபவிக்கப் பணம் இருக் கிறது என்று நினைப்போமானால் அந்தப் பணத்தினால் நமக்கு நன்மை விளையாது; மேலும் மேலும் அறியாமையும், பிறப்பும் உண்டாகும். மங்குறு செல்வ வலைப்படு வேனேல் எங்கள் பிரான்பினை எங்ஙனம் உய்கேன் என்று குர்ங்கு சொன்னதைக் கேட்ட சிவபெருமான், "நீ அப்படி நினைப்பது நல்லதுதான். ஆனாலும் நீ உலகத்தில் சக்கரவர்த்தி யாக வாழ்ந்துவிட்டு இங்கே வந்து நம்மை அடைவாயாக! சிறிதும் மயங்க வேண்டாம்" என்று அநுக்கிரகம் பண்ணினான். என்னலும் அன்னதை எம்இறை கேளா, நின்உனம் நன்று ; நிலத்திடை வைகிப் பின்இவண் மீள்குதி ; பேதுறல் எய்தி முன்னலை யாதும், முசுக்கலை என்ருன். (தெய்வயானை. 40.)- வைகி - தங்கி, பேதுறல் எய்தி- மயக்கத்தை அடைந்து-முன்னலை-யோசிக் கரதே.] அப்போது அந்தக் குரங்கு, "எம்பெருமானே, புலால் உடம்பைப் பெற்றுப் பூவுலகத்திற்குச் சென்றாலும் உன்னை மறந்து போகாமல் இருப்பதற்கு இப்போதுள்ள நிலையும் ஞாபகம் வரும்படி செய்யவேண்டும். அதற்காக இந்தக் குரங்கு முகமே அந்தப் பிறவியிலும் இருக்கும்!11டி அருள் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டது. பொய்ம்மறை யான புலாலுடல் போற்றி அம்மையில் வாழ்விடை அற்ற முறமே இம்முக னோடுற ஏற்சுருள் என்னா மெய்ம்முக வின்கலை வேண்டிய தன்றே. " (தெய்வயானை. 41, ) (பொய்ம்மறை - பொய்யை மறைக்கும் பண்டம். அம்மையில் - அந்தப் பிறவியில் அற்றம் - சோர்வு; மறதி.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/512
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை