பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 நான் உன் அடிமை. இவளை உனக்கு கந்தவேன் கதையமுதம் மனைவியாக நான் கொடுத்தேன்' என்று சொல்லித் தாரை வார்த்தான். இந்திரன் வேத மந்திரத்தினால் தாரை வார்த்து, தன் மகளைக் கொடுக்க, அந்தக் கன்னிகாதானத்தை முருகப் பெருமான் ஏற்றான். மருத்துவன் மாமறை மந்திர திரால் ஒருத்தி பொருட்டினில் ஒண்புனல் உய்ப்பக் கரத்திடை ஏற்றன னால்கழல் சேர்ந்தார்க் கருத்திகொள் முத்தியும் ஆக்கமும் ஈவோன். ( தெய்வயாளை.246.) (மருத்துவன் இந்திரன். உய்ப்ப - வார்க்க, அருத்தி-விப்பம்.] தன்பால் அன்பு செய்தவர்களுக்கு இக வாழ்வையும், பர வாழ் வையும் கொடுக்கிற பரம தாதாவாகிய ஆண்டவன் இங்கே இந்திரன் கொடுக்கத் தேவசேனையை ஏற்றான். அது அவன் கருணையைக் காட்டுகிறது. தேவசேனை செய்த தவத்தின் பயனாக அவளை ஏற்றுக்கொண்டான். அப்போது பிரமன் மங்கல நாண் கொடுக்க அதை வாங்கித் தேவசேனையின் திருக்கழுத்தில் கட்டி, அவளுக்கு மாலை சூட்டினான். செங்கம லத்திறை சிந்தையின் ஆற்றி அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்ட மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான். தெய்வயானை.217.) [செங்கமலத் நிறை - பிரமள், சிந்தையின் ஆற்றி - மனத்தினால் இயற்றி, மணிக் களம் ஆர்த்து -அழகிய கழுத்தில் கட்டி சூழ்ந்தான்கற்றினான்,] முருகப் பெருமான் தேவசேனைக்குத் தாலி கட்டியதாகக் கச்சியப்பர் சொல்கிறார். தாலி சில ஆராய்ச்சிக்காரர்கள் பழங்காலத்தில் தமிழ் நாட்டில் தாலி இல்லையென்று சொல்வார்கள். சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகிக்குத் தாலி கட்டியதாக வருகிறது. வட நாட்டில் தாலி கட்டும் வழக்கம் இல்லை. தமிழ் நாட்டில் வீரன் ஒருவன் தன்னு டைய வீரத்தைக் காட்டுவதற்குப் புலியின் பல்லைக் கொண்டுவந்து