தெய்வயானை திருமணம் 499 தன் காதலிக்குத் தருவான். அதை அலங்காரமாக அவள் கழுத்தில் அணிந்து கொள்வாள். இரண்டு வகையான தாலி உண்டு. ஒன்று அச்சுத் தாலி. மற்றொன்று ஆமைத்தாலி. அவற்றையே காசு, பிறப்பு என்று சொல்வார்கள். யாப்பிலக்கணத்தில், வெண்பாவின் ஈற்றுச் சீர் நாள்மலர்,காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் முடியும் என்பார்கள். அச்சுத் தாலியைக் குறிப்பது காசு; ஆமைத்தாலியைக் குறிப்பது பிறப்பு. வாய்பாடாக வரும் சொல் எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்க வேண்டும். அக் காலத்தில் இவை இருவகைத் தாலிகளா தலின் யாவருக்கும் தெரிந்திருந்தன. முருகப் பெருமான் பிறகு அக்கினியை வலம் செய்து சப்தபதி முடித்து, தேவசேனையின் திருவடியை அம்மியின்மேல் வைத்து வலம் வந்தான். பிரமனின் உச்சியின்மேல் அடி வைத்த எம் பெருமான் இப்போது தேவசேனையின் திருவடியைப் பிடித்து அம்மி யின்மேல் வைத்தானாம். உலகருள் காரணன் ஒண்ணுத லோடும் வலமுறை யாக வயங்கனல் சூழ்ந்து சிலையிடை அன்னவள் சீறடி தந்தான் மலரயன் உச்சியின் மேலடி வைத்தான். தெய்வயானை.252.) [சிலையிடை அம்மியின் மேல். சீறடி - சிறிய அடியை.] தேவசேனையைத் திருமணம் செய்துகொண்ட முருகப் பெருமான் தேவசேனையோடு தாயையும் தந்தையையும் வலம் வந்தான்; வணங்கினான். இவ்வகை மன்றல் இயற்றிய பின்னைத் தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன் அவ்லையொ டத்தனை அன்பொடு சூழ்ந்து செவ்விதின் மும்முறை சேவடி தாழ்ந்தான். தெய்வயானை.354. (மன்றல் - திருமணம். தெய்வமாது - தேலயானை. அவ்வை - தாய். சூழ்ந்து வலம் வந்து.] மூன்று முறை தாய் தந்தையர்களை வணங்கியதாகக் கச்சியப்பர் சொல்கிறார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/519
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை