பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வயானை திருமணம் மலைம டந்தையும் இறைவனும் மைந்தற்கும் மகட்கும் தலைமை செய்தருன் புரிதலும் சாலையுள் இருந்த அலர வன்முதல் அமரரும் முனிவரும் அணங்கின் குலம டங்கலும் அவரடி முடிமிசைக் கொண்டார். 4 501 (தெய்வயானை.258.) (சாலை மணமண்டம். அணங்கின் குலம் - தேவமகளிர் கூட்டம், அவர் அடி முருகனடியையும் தேவயானையின் அடியையும்.) இறைவனும், இறைவியும் இருந்த ஆசனத்தில் முருகப்பெரு மானும், தேவசேனையும் அமர்ந்தார்கள். பதவியைக் கொடுத்த பிறகு அவர்கள் அங்கே இருக்கலாமா ? பதவியைக் கொடுத்தோம் என்று சொன்னவுடன் அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதற் காக அவர்கள் மறைந்து போனார்கள். எத்தனையோ பேர், "என் பிள்ளையிடம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன்" என்பார்கள். பிறகும் அங்கேயே இருந்து பல குழப்பத்தை உண்டாக்குவார்கள். புராணங்களில் வரும் நிகழ்ச்சிகளை வெறும் கதைகள் என்று நினைக்கக் கூடாது. மனிதன் வாழவேண்டிய முறையை வகுத்துக் காட்டுபவை அவை. தேவசேனையை மணந்துகொண்ட எம்பெருமான் அவளோடு இணைந்தான். அதனை அலங்காரமாகப் பாடுகிறார் கச்சியப்பர். தேவயானை என்ற யானையை முருகப் பெருமான் ஒரு கயிற்றால் கட்டி, தன் ஊருக்குக் கொண்டு வந்து, அங்குசத்தைக் கையில் கொண்டு ஒரு தூணில் பிணித்தான்' என்று தொனிக்கும்படி சொல்கிறார். சேணு தித்திடு தெய்வதக் களிற்றினைச் செவ்வேள் நாணி விற்கட்டி நகரிடைத் தந்துநற் கலன்கள் பூணு தற்றுறும் அங்குசம் கைக்கொடு புயமாம் தூணு றப்பிணித் தணைத்தனன் அருளெனும் தொடரால். தெய்வானை.284.) நாணினிற் கட்டி என்பதற்கு மங்கல நாணால் கட்டி என்பது ஒரு பொருள்; கயிற்றினால் கட்டி என்று மற்றொரு பொருளும் தொனித்தது. பூணுதல் துறும்-பூணுதலைச் செறிந்த. அங்குசம் கைக்கொடு- அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கையில் கொண்டு என்பது ஒரு