பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 கந்தவேள் கதையமுதம் பொருள்; அழகான தனத்தைக் கைக்கொண்டு என்பது ஒரு பொருள். அருள் என்னும் சங்கிலியால் புயமாகிற தூ ணில் கட்டினானாம். இந்தீரன் மகுடாபிஷேகம் திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடந்த பிறகு தேவலோகத் திற்கு எழுந்தருளினான் முருகன். சூர சங்காரம் ஆன பிறகு இந்திரன் தன் ராஜ்யத்தைப் பெற்றிருந்தான். மறுபடியும் அவனுக்குப் பட்டாபிஷேகம் ஆகவேண்டும். அதற்காக முருகப் பெருமான் தேவ லோகத்திற்கு எழுந்தருளினான். இந்திரனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து மணி முடி சூட்டி அனுக்கிரகம் பண்ணினான். அரசியல் உரிமைத் தெல்லாம் ஆங்கவர் அழைத்துக் கங்கைத் திரைசெறி தெண்ணீர் ஆட்டிச் செழுத்துகில் கலன்கள் சாந்தம் விரைசெய்தார் புனைந்து சீய வியன்பெருந் தவிசின் ஏற்றி வரிசையோ டிந்தி ஏற்கு மணிமுடி சூட்டி னாரால். (வீண்குடியேற்று.40.) சீய வியன் பெருந்தவின. [அரசியல் உரிமைத்து எல்லாம் - அரசியல் உரிமைக்கு உரிய எல்லாவற்றையும்; உரிமைத்து : தொகுதி யொருகம். சிங்காதனம்.] விரை -வரசுனை. புதிய மண்டபம் ஒன்றை அமைத்து, ஆகாச கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டுவந்து இந்திரனுக்கு ஆட்டினார்கள். முறைப்படி இந்திரனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி மணி முடி சூட்ட, அந்தச் செயலை நிகழ்த்தி வைத்தான் பெருமான். $1 அப்போது முடிசூட்டிக்கொண்ட இந்திரன் முருகப் பெருமானின் திருவடியில் தன் முடியை வைத்து வணங்கினான். எம்பெருமானே, நீ எழுந்தருளித் தேவலோகத்தையும் பதவியையும் சிறப்பையும் பழையபடியே பரிபூரணமாக எனக்கு வாங்கித் தந்தாய். அதனால் நான் உய்தி அடைந்தேன். இதற்கும் மேலே வேறேதேனும் ஊதியம் எனக்கு உண்டோ?" என்று உருகிப் புணிந்தான்,