பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வயானை திருமணம் 603 எம்பெருமான் அவனுக்கு அருள் செய்து அங்கிருந்து திருக் கயிலாயத்தை அடைந்தான். பிறகு தன்னுடைய கந்தகிரிக்கு எழுந்தருளினான். இமையோர் நாட்டில் அறக்கொடியை ஏற்றி வைத்த பெருமானாகிய முருகன் உலகத்திற்கு அருள் செய்துகொண்டு சிவபெருமான் அளித்த தலைமையோடு தேவசேனையுடன் அங்கே எழுந்தருளி இருந்தான். பழையபடி தேவர்கள் தம் நிலையைப் பெறும்படி முருகன் செய்தான். தேவலோகத்தில் பழையபடி அவர்களைக் குடியேற்றி னான். இதை அருணகிரிநாதர் பாடுகிறார்: இமையவர் நாட்டினில் நிறைகுடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே! (திருப்புகழ்.)