தக்க யாக சங்காரம் 505 லாபத்தை உத்தேசித்துச் செய்கிற தவம் நல்ல தவம் ஆகாது. அதைவிட மோசமானது ஒன்று உண்டு; தவத்தின் ஆற்றலால் பிறருக்குத் துன்பம் செய்து, தான் உயர்ந்த தலைவனாக இருக்க வேண்டுமென்று நினைப்பது அது. இந்தத் தவம் அசுரத் தவம். இராட்சசர்களில் இராவணனும், அசுரர்களில் சூரனும் தவத்தில் உயர்ந்தவர்கள். அவர்கள் செய்ததுபோல யாரும் செய்ய முடியாது. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் மேலான பதவி வகிக்க வேண்டும், எல்லோரையும் அடக்கி ஆளவேண்டுமென்ற நோக்கத்தோடு தவம் செய்தார்கள். நல்ல தவம் என்பது இறைவனிடம் மாறாத அன்பு கொண்டு செய்வது. எளியோரிடத்தில் பரிவும், இரக்கமும் காட்டுகின்றவனே உண்மையான தபஸ்வி ஆவான். நற்றவம் என்பது பிறப்பை அறுப்பதற்குச் செய்யும் தவம் என்றும் கொள்ள லாம். திருக்குறளில், " கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்" என்கிற இடத்தில், 'பிறவிப் பிணிக்கு மருந்தாதலின் நற்றாள் என்றார்' என்று பரிமேலழகர் உரை செய்கிறார். ஞானசம்பந்தப் பெருமான் பாட்டை 'நற்றமிழ்' என்று அப்பர் சுவாமிகள் சொல்வார். நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்." இங்கே நற்றமிழ் என்பதற்குப் பிறவிப் பிணிக்கு மருந்தாக இருக்கும் தமிழ் என்று பொருள்கொள்வது சிறப்பு. அதுபோல் நற்றவம் என்பது பிறவியை அறுப்பதற்குச் செய்யும் தவம் என்று கொள்ள வேண்டும். தக்கன் செய்த தவம் தன்னலம் காரணமாகச் செய்த தவம். தக்கன் பெற்ற வரம் அவன் இறைவனிடம் வரம் கேட்டான்; "இந்த உலகத்தில் உள்ளவர்களும்,தேவலோகத்தில் உள்ளவர்களும் என் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். உன்னை வந்து வழிபட்டு வணங்கு கிற உயிர்கள் எல்லாம் என்னை வந்து வழிபட வேண்டும். உன்னை அல்லாமல் வேறு யாரையும் வழிபடாத நிலை எனக்குத் தர வேண்டும்" என்று வேண்டினான். 64
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/525
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை