பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்க யாக சங்காரம் 507 அதில் அவன் அகங்காரம் தொனிக்கிறது ஆண்டவன் மறையவனாக வந்து திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று வேண்டுமென்று கேட்டான். மறையவன் - அந்தணன். சிவபெருமானை அந்தணன் என்று சொல் வது வழக்கம். 4+ யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்" என்று அகநானூறு சொல்கிறது. சிவபெருமானே அநாதியாகிய அந்தணன். ஆகையால்தான் மறையவனாக நீ வரவேண்டுமென்று தக்கன் கேட்டுக் கொண்டான். தக்கன் மணம் புரிந்து மக்களைப் பெறுதல் இறைவன் தக்கனுக்கு அவன் கேட்ட வரங்களை அருளிச் செய்தான். உடனே தக்கன் தனக்கென்று தக்கமாபுரி என்ற ஊரை அமைத்துக் கொண்டான். எல்லோரையும் தன் ஆட்சிக்குள் அடக்கி ஆண்டான். வேதவல்லி என்பவளை மணந்தான். அவள் வாயிலாக ஆயிரம் மைந்தர்களைப் பெற்றான். அந்தக் குழந்தை களிடம் நாரதர் சென்று, உலகத்திலுள்ள எல்லோரும் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய வேண்டுமென்று அறிவுறுத்த, அவர்கள் தவம் செய்யப் போய்விட்டார்கள். உண்மையான தவத்தை அவர்கள் செய்தார்கள். அதைக் கண்டு தக்கன், இவர்கள் நமக்குப் பயன்படாத பிள்ளைகளாக ஆகிவிட்டார்களே !' என்று, மறு படியும் ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றான். நாரதர் மறுபடியும் வந்து அவர்களுக்கு உபதேசம் செய்ய, அவர்கள் எல்லாம் தவம் செய்யப் போய்விட்டார்கள். + 'பிள்ளைகளைப் பெறுவதனால் எந்த விதமான பயனும் இல்லை. ஆகையால் நாம் இனிமேல் பெண்களையே பெறவேண்டும்' என்று தீர்மானித்தான் தக்கன். முதலில் இருபத்து மூன்று பெண்களைப் பெற்றான். தர்மன், பிருகு, மரீசி முதலியவர்களுக்கு அவர்களை மணம் புரிந்து கொடுத்தான். அதற்குப் பிறகு இருபத்தேழு நட்சத்திரங்களைப் பெற்றுச் சந்திரனுக்கு மணம் செய்வித்தான். சந்திரன் பெற்ற சாபம் சந்திரன் கார்த்திகை, ரோகிணி என்ற இரண்டு பெண் களிடத்தில் மாத்திரம் அதிக விருப்பம் கொண்டு மிகவும் காதல் க