தக்க யாக சங்காரம் பிரமன் யாகம் குலைதல் 511 பிறகு ஒரு சமயத்தில் பிரமன் ஒரு யாகம் பண்ணினான். அவியை வாங்கிக்கொள்ளப் பரமேசுவரனை அழைத்தான்.அப்போது இறைவனுக்குரிய அவியை வாங்கிக்கொள்ள, இறைவனுடைய ஏவலின்படி நந்தியம்பெருமான் வந்து நின்றார். அப்போது அங்கிருந்த தக்கன் அவனுக்கு அவியைக் கொடுக்கக் கூடாது என்று தடுத்தான். அதனைக் கண்ட நந்தியம்பெருமானுக்குக் கோபம் உண்டாயிற்று. அப்போது நந்தி தக்கனைப் பார்த்து, "எம்பெரு மானை நீ இகழ்ந்தாய். அப்படி இகழ்ந்த உன் வாயை நான் துளைத் திருப்பேன்.ஆனால் என்னுடைய பெருமான் ஆணை அது அன்று என்று விடுகிறேன். அதனால் நீ தப்பிப் பிழைத்தாய். இனி இப்படிப் பேசாதே. பேசினால் உன் சிரத்தை நான் வெட்டுவேன்" என்று சினந்தார். 26 ஈது வேலையில் நந்திஅத் தக்கனை எரிவிழித்து எதிர்நோக்கி மாது பாகளை இகழ்ந்தனை ; ஈண்டுநின் வாய்துளைத் திடுவேனால்; ஆதி தன்அருள் அன்றென விடுத்தனன்; ஆதலின் உய்ந்தாய்நீ; தீது மற்றினி உரைத்தியேல் வல்லைதின் சிரம்துணிக் குவன்என்றான். (பிரமபாகம்.28.) [நது வேலையில் - இந்தச் சமயத்தில். ஆதி - சிவப்பெருமான். வல்லை - விரைவில்.] அன்பு இல்லாத மனத்தை உடைய இழிந்தவன் ஆகிய உன்னைச் சாருகின்ற தேவர்களும் ஒரு சமயத்தில் உயிர்களை எல்லாம் இழந்து போய், வீரபத்திரனால் அழிக்கப்படுவார்கள். எழுந்த பிறகு மறுபடியும் சூரன் என்னும் அசுரனால் துயரில் மூழ்குவார்கள் என்று சாபம் இட்டார். ஈரம்இல் புன்மனத்து இழுதை மற்றுனைச் சாருறு கடவுளர் தாமும் ஓர்பகல் ஆருயிர் மாண்டுஎழீஇ, அளப்பி லாஉகம் சூரெனும் அவுணனால் துயரின் மூழ்கவே. 33 (பிரமயாகம்.27.) [ஈரம் - அன்பு - இழுதை - இழிந்தவன், கடவுளர் -தேவர்.] அந்த யாகம் நடக்கவில்லை ; குலைந்து விட்டது. அங்கே வந்தவர் கள் பயந்து போய்விட்டார்கள். இந்தச் சிவபெருமானை அழைக்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/531
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை