பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 கந்தவேள் கதையமுதம் காமல் நானே ஒரு யாகம் நடத்துகிறேன்" என்று தக்கன் அறைகூவினான். தக்கன் யாகம் செய்தல் யாகம் செய்வதற்குத் தலைவன் வேண்டுமே! இறைவனுக்கு யக்ஞேசுவரன் என்று ஒரு பெயர். அவன்தான் வேள்வித் தலைவன். தக்கன் திருமாலையே தலைவனாக வைத்து யாகம் செய்யத் தொடங்கி னான். அப்போது எத்தனையோ கெட்ட சகுனங்கள் உண்டாயின. அவற்றை எல்லாம் தக்கன் சிறிதும் பொருட்படுத்தவில்லை. திருமாலுக்கும் பிரமனுக்கும் உபசாரம் செய்து அவர்களைப் பூஜை பண்ணினான். இதனை அறிந்த நாரதர் சிவபெருமானிடம் சென்று தக்கன் யாகம் பண்ணத் தொடங்கியதைக் கூறினார். அதனை அம்பிகை கேட்டாள். பெண்மணிகளுக்கு எப்போதும் பிறந்த அகத்திலே பாசம் இருக்கும். "நான் என்னுடைய தகப்பனார் செய்யும் வேள்வியைப் போய்ப் பார்த்துவிட்டு விரைவில் வந்து விடுகிறேன். சம்பிரதாயத்திற்குத் தலை காட்டிவிட்டு வந்து விடுகிறேன் " என்று சொல்வதுபோலச் சொன்னாள். "எனக்கு விடை கொடுங்கள்" என்று கேட்டாள். தந்தை எனப்படு தக்கன் இயற்றும் அந்த மகந்தனை அன்பொடு நோக்கி வத்திடு கின்றனன் வல்லையில்; இன்னே எந்தை பிரான்விடை ஈகுதி என்றாள். (மகம் - வேள்வி, வல்லையில் - விரைவில்.] (உமைவரு.B.) அப்போது சிவபெருமான், "தக்கன் உனக்கு அழைப்பு அனுப்பவில்லையே!நம்மைப்பற்றி எண்ணாத தேவர்கள் கூட்டம் அங்கே இருக்கிறது. அவர்களின் மதி மயங்கிவிட்டது. ஆகவே, நீ அங்கே போக வேண்டாம்" என்று சொன்னான். "என்னுடைய தந்தை செய்யும் பிழையைப் பொறுக்க வேண்டும். நான் போக அனுமதி கொடுங்கள் ” என்று வேண்டி இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு தக்கன் யாகம் செய்கின்ற இடத்துக்கு வந்து சேர்ந்தாள் அம்பிகை.