34 தொண்டர் இயல்பு கந்தவேள் கதையமுதம் திருநகரப் படலத்தில் வருகிறது ஒரு பாட்டு. கண்டு கேட்டவை உண்டுயிர்த் துற்றறி கருவி கொண்ட ஐம்புலன் ஒருங்குற நடாத்திய கொள்கைத் தொண்டர் கூட்டமும், விழிவழிப் புனலுகத் தொழுங்கை அண்டர் கூட்டமும் ஆலயத் தொறுந்தொறும் அறவால், (திருநகரம்.41} (ஒருங்குற - ஒருமைப்பட. அண்டர்- தேவர்.] இறைவன் எழுந்தருளியிருக்கிற ஆலயங்கள் காஞ்சிபுரத்தில் பல. ஒவ்வோர் ஆலயத்திலும், தொண்டர்களின் கூட்டமும் அண்டர் களின் கூட்டமும் இருக்கும். நம் கண்காணத் தொண்டர் கூட்டம் தொழும். நம் கண்ணுக்குப் புலப்படாமல் தேவர்கள் வந்து தொழு வார்கள். தேவலோகத்தில் இருக்கும் தேவர்களுக்குக் கைலாசத் தில் சென்று இறைவனை வழிபடுவதைவிட நிலவுலகத்திற்கு வந்து வழிபடுவதில் நாட்டம் அதிகம். அனபர்கள் கூடியிருக்கும் இடத் தில்-ஆண்டவன் அருளை வழங்குவான். ஆதலால், அப்படி அருள் வழங்கும் இடத்தில் வந்து ஆண்டவனைத் தொழுதால் அதனால் நல்ல பலன் பெறலாம் என்று அண்டர்கள் வருகிறார்கள். அதுமாத்திரம் அன்று. இறைவனைத் தொழுகின்ற தொண்டர்களைத் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டாகிறது. தொண்டர்களைத் தொழுது தம்முடைய உள்ளக் கிடக்கையை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பது தேவர்கள் ஆசை. ஆகவே, தொண்டர் கூட்டம் இருக்கிற ஆலயங்களில் அண்டர் கூட்டமும் இருக்கிறது. தொண்டர் கூட்ட இயல்பைச் சொல்ல வருகிறார் கச்சியப்ப சிவாசாரியார். நமக்கு ஐந்து பொறிகள் இருக்கின்றன. காணக் கண்களும், கேட்கச் செவியும். சுவைக்க நாவும், உயிர்க்க மூக்கும், பரிசிக்கத் தோலும் இருக்கின்றன. இந்த ஐந்து பொறிகளின் வாயி லாக உணர்கிறோம். இறைவனைப் பூசை செய்யும்போது மனம் ஒருமித்து எல்லாப் பொறிகளும் இறைவனிடத்தில் ஈடுபட வேண்டும். அதற்காகவே வெவ்வேறு வகையான செயல்களைப் பூஜையில் வைத்திருக்கிறார்கள். மனம் ஈடுபடவேண்டும் என்பது தான் பூஜையின் பயன். ஆனால் நாம் பூஜை செய்யும்போது வெவ் வேறு எண்ணங்களால் தடுமாறுகிறோம்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை