பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 கந்தவேள் கதையமுதம் தெழித்த வார்புனற் கங்கையஞ் சடைமுடிச் சிவனைப் பழித்த தக்கனை அடுவதல் லால்அவன் பாலில் இழுக்கில் தேவரை அடுவதென்? வேள்வியை எல்லாம் அழித்த தென்னைநீ ? பகலுதி யால்என அறைந்தான். (யாகசங்காரம்.103) [தெழித்த - ஒலித்த. அவன்பாலில் - அவனிடம் இருந்த.) அதற்கு வீரபத்திரதேவன் பதில் சொன்னான். "நான் சட்டப் படிதான் தண்டனை அளித்தேன். பரமேசுவரனை இகழ்ந்தவர்களைத் தண்டிக்கும்படி வேதம் சொல்கிறது. அதன்படிதான் தண்டித்தேன். பரமேசுவரனை இகழ்ந்து வேள்வி செய்தான் தக்கன். அந்த வேள் வியில் அவிநுகர்ந்தவர்கள் எல்லாம் தவறு செய்தவர்களே. ஆகை யால் அவர்களும் தண்டனைக்குரியவர்கள். உன்னையும் நான் தண்டிப் பேன். உன்னால் முடியுமானால் அந்தத் தண்டனையிலிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள்." எல்லை இல்லதோர் பரமனை இகழ்ந்தவன் இயற்றும் மல்லல் வேள்வியில் அவிநுகர்ந் தோர்க்கெலாம் மறைமுன் சொல்லும் தண்டமே புரிந்தனம்; நின்னையும் தொலைப்பாம்: வல்லை யேல்அது காத்திகன் றனன்உமை மைந்தன். (யாகசங்காரப், 105.) [தண்டம்- தண்டனை. வல்லையேல் - வல்லமை உடையவனானால் மைந்தன் - வீரபத்திரன்.] உமை வீர திருமாலுக்கும், வீரபத்திரனுக்கும் போர் நிகழ்ந்தது. பத்திரன் திருமாலின் நெற்றியில் ஒரு கணை எய்தான். அது அவர் நெற்றியிலே பாய்ந்து, அவருக்குத் தளர்ச்சியை உண்டாக்கியது. திருமால் மயங்கியதைப் பார்த்த வீரன், போர் செய்யாமல், தன் வில்லைத் தேரிலே ஊன்றிக்கொண்டு, அம்புகளை விடாமல் நின்று திருமால் தெளிவு பெறட்டும் என்று காத்திருந்தான். திருமால் மறுபடியும் தெளிவு பெற்றுப் போர் செய்யப் புகுந்தார். திருமால் தம்மைப் போலப் பல திருமால்களை உண்டாக்கிப் போர் செய்தார். அந்தத் திருமால் கூட்டங்களை வீரபத்திரன் தன் விழியால் பார்த் தான். திருமால் கூட்டம் அடியோடு அழிந்தது. உடனே திருமால் தன் கையிலுள்ள சக்கராயுதத்தை வீசினார். அங்கு அவர் யாரையும், அமலன் வெய்யகட் பொங்குஅழல் கொளுவிநுண் பொடிய தாக்கலும் மங்கய விழியினான், பரமன் அன்றுஅருள் செங்கையில் ஆழியைச் செல்கென் றேவினான். (யாகசங்காரம்.181.7 (அமலன் -வீரபத்திரன். கொளுவி -மூட்டி. பங்கய வீழியினான் திருமால், ஆழி - சக்கராயுதம்.) .