நாடும் நகரமும் கையொன்று செய்ய விழியொன்று வாடக் கருத்தொன்றெண்ணப் பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால்கமழும் மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான் செய்கின்ற பூசைஎவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே " என்று பட்டினத்தார் பாடுகிறார். 36 உண்மையான தொண்டர்கள் ஐந்து பொறிகளையும் இறைவன் சம்பந்தமான செயல்களில் ஈடுபடுத்திப் பூஜை புரிவார்கள். ஆண்ட வன் திருமேனியைக் கண்டும், அவன் புகழைக் கேட்டும்,அவனு டைய பூஜையில் பயன்பட்ட சந்தனம், மலர் முதலியவற்றை மோந்தும், அவனது பிரசாதத்தை உண்டும், ஐம்பொறிகள் அவனு டைய தொடர்புள்ள செயல்களில் இயங்க, அவனுடைய அருளிலே கலந்து நிற்பார்கள். இது தொண்டர்களுடைய இயற்கை. இதைச் சொல்ல வருகிறார். கண்டு கேட்டவை உண்டுயிர்த் துற்றறி கருவி கொண்ட ஐம்புலன் ஒருங்குற நடாத்திய கொள்கைத் தொண்டர் கூட்டமும், விழிவழிப் புனலுகத் தொழுங்கை அண்டர் கூட்டமும் ஆலயந் தொறுத்தொறும் ஆருவால் எல்லாம் சிவமயம் OP அந்த நகரில் ஆங்காங்குக் காணும் காட்சிகளைத் தொகுத்துச் சொல்கிறார். சிறந்த நகரமென்று இருந்தால் பல இடங்களில் நாடகங்கள் நடக்க வேண்டும். பாட்டுப் பாடுகின்ற அரங்குகள் இருக்க வேண்டும். பொழுது போக்குவதற்குரிய நடனசாலைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய வேண்டும். இது நாகரிக வாழ்க்கை. நாம் இப்போது பார்க்கிற நடனங்கள் யாவுமே உள்ளத்தை மயக்கு வனவாக அமைந்திருக்கின்றன. கேட்கிற பாட்டோ வரையறை இல்லாமல் கண்டபடி பாடும் பாட்டாக இருக்கிறது. ஆனால் காஞ்சி புரத்திலுள்ள அரங்குகள் எப்படி இருக்கின்றன? கச்சியப்ப சிவாசாரியார் சொல்கிறார். அங்கே ஆடும் ஆட்டம்,பாடும் பாட்டு எல்லாமே இறைவ னோடு தொடர்பு உடையனவாக இருக்கின்றன. நடனசாலையில் நடராஜப்பெருமானின் நாட்டியத்தையே ஆடிப் பாடுகிறார்கள்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/55
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை