தக்க யாக சங்காரம் தலையை எடுத்து அந்த முண்டத்தோடு சேர்த்தான். ஆட்டின் தலையோடு தக்கன் எழுந்து வந்தான். வித்தக வலிகொள் பூதன் வீரபத் திரன்தன் முன்னர் உய்த்தலும், அதன்மேல் வேள்விக்கு உண்டியாம் பசுவுள் வீத்த மைத்தலை கண்டு சேர்த்தி எழுகென்றான், மறைகள்போற்றும் 531 உடனே அத்தனை இகழும் நீரர் ஆவர் இப் பரிசே என்னா. [பூதன் - பாலுகம்பன். ஆட்டின் தலையை.] தக்கன் எழுந்து வந்து (யாக சங்காரப். 183.) மைத்தலை அதன்மேல் - அந்த முண்டத்தின்மேல். எம்பெருமானை வணங்கி,"என் நீ அபராதங்களை மன்னிக்க வேண்டும்" என்று வேண்டினான். அஞ்சாதே" என்று ஆண்டவன் அவனுக்கு அபயம் கொடுத்தான். "தீயவனாகிய நான் புரிந்த தீமையை மனத்தில் கொள்ளக் கூடாது. நான் செய்த தீமைக்கு அளவே யில்லை. இப்போது நினைக்கும்போது என்னுடைய நெஞ்சமே எரிகிறது. நீ எனக்கு அருள் செய்தமையினால் நாள் உஜ்ஜீவனம் அடைந்தேன்" என்று சொல்லித் தக்கன் மனம் உருகி நின்றான். அஞ்சலென்று அருள லோடும் அசமூகத் தக்கன் எங்கோன் செஞ்சரண் முன்னர்த் தாழ்ந்து, தீயனேன் புரிந்த தீமை நெஞ்சினும் அளக்கொ ணாதால்; நினைதொறும் சுடுவ தையா, உஞ்சனன், அவற்றை நீக்கி உளதருள் புரித்த பண்பால். (யாக சங்காரப். 160.) [அசமுகத் தக்கன் - ஆட்டுத்தலையைப் பெற்ற தக்கன்.] அதன் பிறகு சிவபூஜை செய்து தக்கன் புனிதன் ஆனான். இவ்வாறு பழைய கதையைப் பிரகஸ்பதி பகவான் சயந்தனுக் குச் சொல்லி முடித்தார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/551
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை