536 கந்தவேள் கதையமுதம் படி செய்தான். வள்ளி நாயகியின் அருமை தெரியாமல் மற்றக் குறப்பெண்களைப்போல எண்ணி இந்தச் சிறிய காரியத்தை அவன் செய்தான். இங்கே கச்சியப்பர் ஓர் உவமை சொல்கிறார். குருவிகள் கூடு கட்டும். அந்தக் கூட்டுக்குள் ஒளி உண்டாவதற் காக மின்மினிப் பூச்சியைக் கொண்டு வந்து வைக்கும். ஒரு குருவி மிக உயர்ந்த இரத்தினத்தை, ஒளி உடையதாக இருப்பதைக் கண்டு மின்மினி என்று எடுத்து வந்து தன் கூட்டுக்குள் வைத்தது. மின்மினி எங்கே? நாயகம் ஆகிய இரத்தினம் எங்கே? குருவிக்கு அதன் அருமை தெரியுமா? மின்மினிப் பூச்சியைப் போலவே அதையும் நினைத்து எடுத்துவந்து வைத்தது. அதுபோல, முருகப் பெருமானுடைய தேவியாக வரப்போகிற அமுதம் போன்ற வள்ளிநாயகியை, கையிலே வில்பிடித்த வேடர்கள் புனம் காக்கும்படி வைத்தார்கள் என்று சொல்கிறார் கச்சியப்பர். காட்டில் எளிதுற்ற கடவுள்மணி யைக்கொணர்ந்து கூட்டில் இருளோட்டக் குருகுஉய்த்த வாறன்றே? தீட்டுகடர் வேற்குமரன் தேவியாம் தெள்ளமுதைப் பூட்டுசிலைக் கையார் புனம்காப்பு வைத்ததுவே. [வள்ளியம்மை. 49.] (கடவுள் மணி - தெய்வத்தன்மை பொருந்திய மாணிக்கம். குருகு - பதவை. சிலை - வில்.] வள்ளிநாயகி தினைப்புனத்தில் ஆலோலம் பாடித் தோழிமார் களோடு விளையாடிக் கொண்டு தினையைக் காவல் செய்திருந்தாள். முருகன் தினைப்புனம் வருதல் அப்போது முருகன் கந்தகிரியிலிருந்து திருத்தணி மலைக்கு வந்து அமர்ந்திருந்தான். வள்ளிநாயகியை ஆட்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டதால் அந்தப் பெருமான் அங்கே வந்தான். நாரத முனிவர் திருத்தணி போய் முருகப்பெருமானைத் தரிசித்து, அருகில் உள்ள வள்ளிமலையில் வள்ளி என்ற ஒருத்தி இருக்கிறாள். அவள் மிக்க பேரழகி. அவளை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று சொன்னார். நாரதர் சொன்னதைக் கேட்டு, புதிதாக வள்ளியைப் பற்றித் தெரிந்துகொண்டவனைப் போல முருகன் மனமுனந்தான். அவனுக்குத் தெரியாதா இது? என்றாலும்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/556
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை