பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியம்மை திருமணம் 837 தெய்வ கைங்கர்யத்தில் பலரையும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டு மென்பது அவன் ஆசை. பிறர் சொல்வதைக் கேட்டுச் செய்வது போலச் செய்தான். இதனால் நாரதருக்கு மகிழ்ச்சி உண்டாகும் அல்லவா? உடனே முருகப்பெருமான் ஒரு வேடன் போல் வேடம் தாங்கி வள்ளி மலையை நோக்கி வந்தான். இயல்பாக இருப்பதைக் காட்டிலும் வேடம் புனைகிறவன் மிகவும் சிறப்பாக நடிப்பான். முருகப் பெருமானும் வேடர்களுக்குரிய வேடத்தைத் தக்கவண்ணம் பூண்டு கொண்டு வந்தான். அவனுடைய காலில் வீரக்கழல் விளங்கியது. இடையிலே கச்சை அணிந்திருந்தான். தோளிலே மாலை அணிந் திருந்தான். கையில் வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டான். கரிய குஞ்சியை உடையவனாக, நெடிய உருவம் உடையவனாக வேட்டுவக் கோலத்தோடு குமரன் தோன்றினான். காலில் கட்டிய கழவினன், கச்சிணன், மாலைத் தோளினன், வரிவில் வாளியன், நீலக் குஞ்சியன், நெடியன், வேட்டுவக் கோலத் தைக்கிகாடு குமரன் தோன்றினான். {வள்ளியம்மை. 68.9 (கழல் - வீரகண்டை. கச்சு, இடுப்பிலே கட்டுவது.வாளி - அம்பு. ருஞ்சி - கேசம்.] முருகப்பெருமான் நெடிய வடிவம் உடையவன். நெடியன் தொடியணி தோளன் 2º என்று பாடுவார் நக்கீரர். வள்ளிக்கேற்ற நயகன் அவன் வேட்டுவக் கோலத்தோடு வள்ளிநாயகி இருக்கும் தினைப் புனத்தை அணுகினான். அவளோடு பேச எண்ணினான். ஆனால் அந்தப் பெருமாட்டியோ சற்றும் அவனைக் கவனிக்கவில்லை சற்றே அவனைப் பார்த்துப் பிற்கு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அந்தப் பார்வையில் அன்பு இல்லை; கோபந்தான் இருந்தது. முருகன் பேசுதல் . அதைக் கண்ட பிறகு முருகப்பெருமான் அவளைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான். "அழகிய பெண்ணே, உன்னுடைய கண் வாளைப்போல என் உயிரை உண்ணுகிறது. நான் சொல்லும் ஒரு வார்த்தையைக் கேட்கக் கூடாதா?" என்று தொடங்கினான். 63