540 கந்தவேள் கதையமுதம் தூந்தகம் அகைய உண்கண் நங்கைகேள் : ஞாலந் தன்னில் ஏந்திழை யார்கட் கெல்லாம் இறைவியாய் இருக்கும் உன்னைப் போயினார்; புளின ரானோர்க்கு பூத்தினை காக்க வைத்துப் ஆய்ந்திடும் உணர்வு சுற்றும் ஆயன்படைத் திலன்கொல் என்ருள். (வள்ளியம்மை. 7A } புராணங்கள், காவியங்கள் ஆகியவற்றில் உலகியலை உணர்ந்த புலவர்கள் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதைக் குறிப்பாகக் காட்டுவார்கள். பெண்களுடைய மனம் நோவாமல் நடந்து கொள்வதற்குரிய வழியை இங்கே குறிப்பாகக் கச்சியப்பர் காட்டுகிறார். அதைக் கேட்டு வள்ளிநாயகி திரும்பினாள். உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டு அவனுக்கு முதுகைக் காட்டினாள். முருகன் அதைப் பார்த்துச் சொல்கிறான். உன்னுடைய கூந்தல் எவ்வளவு நீளமாக இருக்கிறது" என்று சொல்வானைப் போல், +s வாரிருங் கூந்தல் நல்லாய் நீண்ட கரிய கூந்தலையுடைய பெண்ணே. என்று அழைக்கிறான். " என்னுடைய மதி தளர்கிறது. அந்தத் தளர்ச்சி போக வேண்டுமானால் அருள்செய்ய வேண்டும். உன்னுடைய பெயரைச் சொல். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது என்று சொல்வார்கள். அப்படியானால் உன்னுடைய ஊரையாவது சொல். பேரையும், ஊரையும் சொல்ல முடியாது என்றால் உன்னுடைய ஊருக்குப் போகும் வழியையாவது சொல்" என்று கெஞ்சுகிறான். வாரிருங் கூந்தல் நல்லாய், மதிதளர் வேனுக் குன்றன் பேரினை உரைத்தி ; மற்றுள் பேரினை உரையாய் என்னின் ஊரினை உரைத்தி: ஊரும் உரைத்திட முடியாது என்னின் சீரிய நின்சீ றூர்க்குச் செல்வழி உரைத்தி என்றான். [உரைத்தி - உரைப்பாய். சீலூர் - சுறிய ஊர். (வள்ளியம்rை 71.)
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/560
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை