பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடும் நகரமும் 37 வைக்கிறோம். ஒன்று, இரண்டு, மூன்று என்று அடையாளம் சொன்னால் போதாதா? மேல்நாட்டினர் க்ரீன், ரெட் என்று வைக் கிறார்கள். அப்படியும் வைக்கலாம். நாம் அப்படி வைப்பதில்லை. பெயர்கள் அடையாளமானாலும் அந்த அடையாளத்திலும் ஒரு சிறப்பு இருக்கிறது. நான் திருக்குறள் உரைகளுடன் உள்ள புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன், படித்துக்கொண்டிருந்தபோது உறக்கம் வந் தது. அப்படியே மூடி வைத்துவிட்டுப் படுத்துறங்கினேன். விடியற் காலையில் எழுந்தவுடன் புத்தகத்தைப் படிக்கலாம் என்று எண்ணி னேன். விட்ட இடத்திற்கு அடையாளம் வைக்கவில்லையே என்ற நினைவு வந்தது. புத்தகத்தைப் புரட்டியபோது விட்ட பக்கத்தில் ஒரு பூச்சி அகப்பட்டுச் செத்துக் கிடந்தது. நான் படித்த அதிகாரம் கொல்லாமை. கொல்லாமை அதிகாரத்தில் ஒரு கொலை நிகழ்ந்திருந்தது! இதைச் சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. எங் என்னிடத்தில் சில கதைப் புத்தகங்கள் இருக்கின்றன. கள் தெருவில் உள்ள ஒரு பையன் அவ்வப்போது கதைப் புத்தகங் களை வாங்கிக்கொண்டுபோய்ப் படித்துவிட்டு, குறித்த காலத்தில் திருப்பிக் கொடுப்பான். ஒரு முறை சற்றே தாமதமாகக் கொண்டு வந்தான். குறித்த காலத்தில் கொண்டு வரவில்லை என்றால் இனிப் புத்தகம் தர முடியாது; ஏன் இவ்வளவு நாளாக்கி விட்டாய்?" என்று கேட்டேன். ஊரிலிருந்து என் தங்கை வந்திருக்கிறாள். அவள் படித்தாள். அதனால் சொன்ன காலத் திற்குமேல் ஆகிவிட்டது, மன்னிக்க வேண்டும்" என்று அவன் சொன்னான். அந்தப் பையன் கொடுத்த புத்தகத்தை வாங்கிப் பிரித்தேன். அதில் ஓர் அடையாளம் இருந்தது. ஒரு பக்கத்தில் அந்தப் பெண் தான் சூடிக்கொண்டிருந்த தாழம்பூ மடல் ஒன்றை அடையாளமாக வைத்திருந்தாள். முன்னே நான் சொன்னது பூச்சி அடையாளம். இது பூ அடையாளம். இது அடையாளத்திற்கு அடையாளமாகவும் இருந்தது; அந்தப் பக்கத்தில் தன் மணத்தை யும் சேர்த்திருந்தது.