பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 14 கந்தவேள் கதையமுதம் இனி நான் என்னுடைய வேலையைப் பார்க்கப் போகிறேன்; தினை காவல் செய்யப் போகிறேன் " என்று வள்ளிநாயகி புறப்பட்டு விட்டாள். அவள் இவ்வாறு கூறக் கூற ஆண்டவனுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி மிகுதியாயிற்று. தான் செய்யும் சோதனையில் அவள் வென்றுகொண்டே வருகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான்... வள்ளி நாயகியின் உள்ளம் உள்ளத்தில் முருகப் பெருமானிடம் அன்பு உடையவள் வள்ளி; அயலாரைக் கண்கொண்டும் பாராதவள். என்றாலும், வேங்கை யாகவும், வேடனாகவும், கிழவனாகவும் வந்த பெருமானை நோக்கி ஏதோ ஐயம் எழுந்திருக்க வேண்டும். ஆகையால் அந்தப் பெருமா னிடத்தில் அவள் உள்ளம் ஒன்றிப் பற்றிக்கொண்டது. 'யாரேனும் தெய்வந்தான் இப்படி வந்திருக்க முடியும். மனிதனாக இருந்தால் இப்படி வர முடியாது' என்று, அறிவுடைய பெருமாட்டியாகையால் யோசித்திருப்பாள். தன்னுடைய குலத்திற்குக் காவலாகிய முருகப் பெருமானே இப்படி வந்திருப்பானோ என்ற ஐயமும் அவ ளுடைய உள்ளத்தில் தோன்றியிருக்கும். என்றாலும் நிச்சயமாக வில்லை. ஆகவேதான் இவ்வாறு நடந்து கொண்டாள். விநாயகர் வருதல் இனிமேல் வள்ளிநாயகியைச் சோதிக்கக் கூடாது என்று முருகப் பெருமான் எண்ணினான். தனக்கும் அவளுக்கும் இடையி லுள்ள தடைகளை நீக்க வேண்டும். அந்தத் தடையை நீக்குவதற் குரியவன் விநாயகப் பெருமான். அவன்தான் விக்கினங்களைப் போக்கும் விக்கினேசுவரன். ஒரு காரியத்தைச் செய்யப் போகிறவன் பெரியவர்களை முன்னிட்டுக் கொண்டு போவதுபோல, தனக்கு மூத்தவனாகிய விநாயகப் பெருமானை முன்னிட்டு வள்ளிநாயகியோடு சமாதானம் செய்துகொள்ள வேண்டுமென்று எண்ணினான் முருகன். திருமகளைப் போன்ற வள்ளி நாயகி வேகமாக முன்னால் போவதை முருகன் பார்த்தான், இனிமேல் என்ன செய்வது என்று