வள்ளியம்மை திருமணம் 569 தெரிந்து கொண்டிருப்பாள். அவளது அடிமனத்தில் மெல்ல முருகப் பெருமான்தான் அவன் என்ற எண்ணமும், அதனால் அவனிடத்து அன்பும் முதிர்ந்து வந்திருக்கும். யானை வந்தபோது, உயிருக்கே அச்சம் என்ற நிலை வந்தபோது, எல்லா ஐயங்களும் போய் ஆண்டவனைக் கட்டிக்கொண்டாள். நமக்குப் பொருள் வேண்டுமென்ற எண்ணத்தினால் கடவுளிடம் அன்பு செய்வது சிறந்த பக்தி ஆகாது. பொருள் வந்தால் மறுபடி யும் இறைவன் நினைவு மறைந்துவிடும். இந்திராதி தேவர்களே இறைவனை வழிபட்டுப் போகங்களைப் பெற்ற பிறகு இறைவனை மறந்துவிட்டதாக நாம் படிக்கிறோம். ஆனால் உண்மையாக இறைவ னிடத்தில் ஈடுபடவேண்டுமென்றால் நமக்கு ஒரு பயம் உண்டாக வேண்டும். மரண பயம் உண்டானால் ஆண்டவனிடத்தில் முறுகிய பக்தி உண்டாகும். அதைத்தான் 'பயபக்தி' என்று சொல்வார்கள். பிற பொருள்கள் வேண்டுமென்று இறைவனை அணுகும்போது அந்தப் பக்தி வியாபாரம் போல ஆகும். 'ஆவிக்கு மோசம் வரும். என்ற உணர்வு எப்போது ஒருவனுக்கு வருகிறதோ, அப்போது தான் இறைவனிடத்தில் உண்மையான பக்தி உண்டாகும். இதை அருணகிரிநாதர் சொல்கிறார். ந4 ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றி வேன்; வினை தீர்த்தருளாய்; வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ் சேவற் கொடியுடை யானே, அமரர் சிகாமணியே. $ (கந்தர் அலங்காரம்) வள்ளிநாயகிக்கு இதுவரைக்கும் அவன் முருகனாக இருப்பான என்ற ஐயம் இருந்தது. யானையைக் கண்டபோது உயிர்போய் விடும் என்ற அச்சம் தோன்றியவுடன் ஐயத்தை விட்டுவிட்டு அவனை வந்து கட்டிக்கொண்டாள். அன்பு பரிபூரணம் ஆயிற்று. அந்த அன்பு நிறைவேறியதற்குக் காரணம், மரணம் வந்துவிடுமோ உயிர்போய் விடுமோ என்ற ஐயம். அப்போது முருகப் பெருமான் அருள் மலர்ந்தது. t
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/580
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை