பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியம்மை திருமணம் 561 என்னை ஆட்கொள்ளாமல் இதுவரைக்கும் காலதாமதப்படுத்தி விட்டீர்களே! நான் இந்த நுட்பத்தை அறியாமல் எத்தனையோ தப்புச் செய்வதற்கு ஆளாக்கிவிட்டீர்களே! நான் செய்த அப சாரங்களை எல்லாம் பாராமல், அடியேனை ஆட்கொள்ள வேண்டும்" என்று வணங்கினாள். மின்னே ஆனையசுடர் வேலவரே, இவ்வுருவம் முன்னேநீர் காட்டி, முயங்காயில், இத்துணையும் கொன்னே கழித்தீர்; கொடியேன்செய் குற்றமெலாம் இன்னே தணித்தே எனையாண்டு கொள்ளும்என்றள். (வள்ளியம்மை. 118.) [முயங்காமல் தழுவாமல். கொள்ளை - வீணாக. இன்னே இப்பொழுதே.] எம்பெருமானே, உம்முடைய முழுவடிவத்தைக் காட்டா விட்டாலும் உம்முடைய வேலாயுதத்தைக் காட்டியிருந்தால் அதைக் கண்டு நான் இனம் கண்டுகொண்டிருப்பேனே?' என்று சொல் வாளைப்போல், மின்னே அனைய கடர் வேலவரே என்று சொன்னாள். பின்பு வள்ளிநாயகி தன்னுடைய பரணை அடைந்தாள். முருகப் பெருமானும் அங்கேயிருந்து மறைந்தான். காதல் நிகழ்ச்சிகள் அதன்பிறகு முருகப் பெருமான் அடிக்கடி தினைப்புனத்திற்கு வந்து வள்ளிநாயகியோடு அளவளாச் செல்வது வழக்கமாயிற்று. இதைக் களவுக் காதல் என்று சொல்வார்கள். அடுப்பாரும், கொடுப்பாருமின்றி அழகில் சிறந்த பெண்மணியும், வீரத்தில் சிறந்த ஆண்மகனும் தாமே சந்தித்துக் காதல் கொண்டு இன்புறுவது களவுக் காதல் ஆகும். தமிழில் இது மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டி ருக்கிறது. இந்தக் களவுக் காதலைப்பற்றி ஒரு தனி இலக்கணத் தையே ஆலவாய் இறையனார் செய்திருக்கிறார். அதற்கு இறையனார் அகப்பொருள் என்றும், சுளவியல் என்றும் பெயர். இதை முன்பும் பார்த்தோம். தகப்பனார் செய்த இலக்கணத்திற்கு, அவரு டைய மகனாகிய முருகப் பெருமானே இலக்கியமாக இருக்கிறான். வள்ளிநாயகியைக் களவுக் காதலில் ஏற்றுக்கொண்டான் முருகன். 71