பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியம்மை திருமணம் 585 முருகன் வள்ளிநாயகியைப் பார்த்து, "நீயே அவர்களை எல்லாம் எழுப்பு" என்றான். வள்ளி எழுக என்று சொல்ல எல்லோரும் எழுந்தார்கள். அப்போது முருகப் பெருமான் தன்னுடைய அற்புதமான வடிவோடு அவர்கள்முன் நின்றான். அவனுடைய ஆறு முகங்களும் கருணை வெள்ளம் பொழிந்தன. அவர்கள் யாவரும் முருகப் பெருமான்தான் தம்முடைய பெண்ணை அழைத்துப் போனான் என்பதை அறிந்து, வியந்து அவன் காலில் வீழ்ந்து பணிந்து போற்றினார்கள். எழுந்திடு கின்ற காலை எர்பிரான் கருணை வெள்ளம் பொழிந்திடு வதனம் ஆறும் புகங்கள்பன் னிரண்டும் வேலும் ஒழிந்திடு படையு மாகி உருவினை அவர்க்குக் காட்ட விழுந்தனர் பணிந்து கோற்றி விம்மித நீரர் ஆனார். (மூழிந்திடு படையும் - வேல் ஒழிந்த மற்றப் படைகளும். (வள்ளியம்மை.190.) விம்மிதம் - ஆச்சரியம்.] இங்கே ஆறு முகங்களை முதலில் சொல்கிறார் கச்சியப்ப சிவா சாரியார். வேடர்களுக்குக் கருணை செய்ய வேண்டி இருந்தமையி னால் கருணை பொழிகின்ற முகங்களை முதலில் சொல்கிறார். உயிர்பெற்று எழுந்த வேடர்கள் யாவரும் முருகப் பெருமானைப் பணிந்து, "எம்பெருமானே, இப்படி எங்களுக்கு உன்னுடைய உண்மையைத் தெரிவிக்காமல் இருக்கலாமா ? " என்று கேட்டு வருந்தினார்கள். முருகப் பெருமானைக் கண்டவுடன் அவர்களுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. தாங்கள் அஞ்சினபடி, வேறு யாரும் தம்முடைய மகளைக் கொண்டு போகவில்லை என்ற ஆறுதலும் உண்டாயிற்று. அதே சமயத்தில் சற்றுத் துயரமும் உண்டாயிற்று. ஆகையால், இப்படிச் செய்யலாமா?" என்று கேட்டார்கள். 16 வேடர் வேண்டுகோள் இனிமேல் எங்களுடைய சிறிய ஊருக்கு வந்து, அக்கினி சாட்சியாய்த் திருமணம் செய்துகொண்டு, எங்கள் மகளை ஏற்றருள வேண்டும்" என்று அவர்கள் வேண்டிக் கொண்டார்கள்.