568 கந்தவேள் கதையமுதம் வனிதை தன்னுடன் சென்றுயாம் செருத்தணி வரையில் இனிது வைகுதும் என்றலும் நன்றென இசைத்தான். (குனியும் - வளையும். தணி- திருத்தணிகை. ] (வள்ளியம்மை. 210.) ஞரிசிலை - வேந்தனை. வனிதை - வள்ளிநாயகி, செருத் திருத்தணிக்குச் செருத்தணி என்று ஒரு பெயர். யுத்தத்திலே உண்டான கோபம் எல்லாம் தணிகின்ற இடம் என்று பொருள். முருகப் பெருமான் வேடர்களோடு போர் புரிந்து, சோர்வும் கோபமும் கொண்டான். இப்போது வள்ளியைத் திருமணம் செய்துகொண்டு அங்கே போனான். அவன் செருத் தணிந்த இடம் அது. கந்தகிரியை அடைதல் அங்கே சென்று முருகன் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தான். அந்த மூர்த்தியை இன்றும் நாம் தரிசிக்க லாம். அதன் பிறகு முருகவேள் கந்தகிரியை அடைந்தான். தேவயானை அந்த இருவரையும் வரவேற்று வாழ்த்தினாள். உள்ளுறை வள்ளிநாயகியின் திருமணத்தின் உள்ளுறையாக இருக்கிற தத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். நாம் எல்லாம் இன்னும் ஆரம்பகால வள்ளியாக இருக்கிறோம். முருகப் பெருமானைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆன்ம பரமான்மாவின் ஐக்கியந்தான் வள்ளி திருமணம். திருமாலின் மகளாய்ப் பிறந்து, முருகப் பெருமானுக்கு மனைவியாகத் திகழ வேண் டிய வள்ளி, வேடர் கூட்டத்தால் வளர்க்கப்பட்டாள். அவர் களுடைய சார்பினால் அவள் தன்னைக் குறமகளாக எண்ணிக்கொண் டாள். வேடப் பெண்கள் என்ன செய்வார்களோ அவற்றை எல்லாம் செய்தாள். குறமகளைப் போலத் தினைப்புனம் காத்திருந் தாள். தினையை உண்ண வருகிற கிளி, குருவி முதலிய பறவை களைக் கவண் கல்லால் ஓட்டி வந்தாள். ஆண்டவன் வேடவேஷ்ம் தரித்து வந்தான். வேங்கை மரமாக நின்றான். கிழக்கோலம் கொண் டான். இத்தனை சோதனைகள் செய்த பிறகு அவளது உள்ளத்தில்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/589
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை