பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 கந்தவேள் கதையமுதம் மாணாக்கனுடைய பக்குவத்தைத் தெரிந்துகொள்ளப் பல வகையில் சோதனை செய்வார்; தக்க பக்குவம் இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பிறகே அருள் செய்வார். முருகப் பெருமானைத் தெரிந்துகொள்ளாமல் இருந்த வள்ளி யைப் போல, குருநாதர் பெருமையைத் தெரிந்துகொள்ளாமல் ஆன்மாக்கள் இருக்கின்றன. அறிவுடைய ஆன்மா மெல்ல மெல்லக் குருநாதரின் பெருமையைத் தெரிந்துகொள்கிறது. தனக்கு வரு கின்ற துன்பங்களை எல்லாம் நினைந்து, எல்லாவற்றுக்கும் மேலான மரணத் துன்பத்தை உணர்ந்துகொண்டு, பிறகு முழுமையாகச் சரணாகதி அடைகிறது. வள்ளிநாயகி முருகப் பெருமானை அணைந்த நிலை அதைக் குறிக்கிறது. சிவஞான சித்தியாரில் இப்படி ஒரு காட்சி வருகிறது. இங்கே ஆன்மாவாக வள்ளியைக் காட்டியிருக்கிறார் கச்சியப்ப சிவாசாரியார். அங்கே ஆன்மாவை ஓர் அரசன் மகனாகக் காட்டியிருக்கிறார், அந்த நூல் ஆசிரியர். கந்தபுராணத்தைப் படிப்பதில் இரண்டு வகையான பயன்கள் உண்டு. நம் உள்ளத்திலுள்ள அசுர சம்பத்து எல்லாம் போய்ச் சத்துவகுணம் உயர வேண்டும். உயர்ந்த பிறகு இறைவனைப் பதி யாக எண்ணி அன்பு செய்ய வேண்டும். அப்போது அவன் திருவருள் கிடைக்கும். அசுர சம்பத்து எல்லாம் இறைவனுடைய திருவருளால் தான் அழியும் என்பதைக் காட்டுவது சூரசங்காரம். ஆண்டவன் அறியாமையைப் போக்கி, பக்குவம் தந்து ஆட்கொள்வான் என் பதைக் காட்டுவது வள்ளி திருமணம். எனவே, ஆன்மா இறைவ னுடைய அருளைப் பெற்று அவனோடு இணைகின்ற பயனைக் குறிப்பது வள்ளி திருமணம். ஆகையால்தான் கந்தபுராணத்தின் முடிவான கனியாக, வள்ளி திருமணம் இருக்கிறது என்று முன்பு சொன்னேன். ஆன்மாக்கள் யாவுமே பெண்கள். ஆண்டவன் ஒருவன் தான் ஆடவன். நாம் பெண்கள் என்பதை இன்னும் அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். சின்னஞ்சிறு பேதைப் பெண் ஆண்களோடு விளையாடிக் கொண்டிருப்பாள். அறியாப் பெண் என்று மங்கைப் பருவம் அடையாத பெண்களைச் சொல்வது உலக வழக்கம். தான் பெண் என்பதையும் தனக்கு ஒரு காதலன் வேண்டும் என்பதையும்