576 கந்தவேள் கதையமுதம் பூஜை செய்தவர். மற்றவர்களுக்காகப் பூஜை செய்தாலும் அதையே தம்முடைய வாழ்வுப்பயனாகக் கொண்டவர். எல்லாவற்றையும் தருகின்ற வள்ளலாகிய சண்முகநாதனின் பாதபங்கயங்களைப் போற்றி அவர் நூலை முடிக்கிறார். கந்தபுராணம் படிப்பதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது: அகங்கார மமகாரங்கள் இருந்தால் இறைவனைக் காணமுடியாது. அவனோடு ஈடுபடவேண்டுமானால், அவன் திருவருளைப் பெற வேண்டு மென்றால், அவன் கருணையை நினைந்து நெகிழ்ந்து உருக வேண்டும். அப்போது அவனாகவே வலிய வந்து ஆட்கொள்வான். இத்தகைய கருத்துக்களைச் சொல்கின்ற கந்தபுராணம் பெரிய பொக்கிஷம். மகாபுராணங்களில் ஒன்று இது. சிறந்த காப்பிய வடிவில் சொல்லின்பம் பொருளின்பம் தருவதாகவும் அமைந் திருக்கிறது. கதை போல இருந்தாலும் பல் அருமையான தத்துவங்களைத் தன்னிடம் கொண்டிருக்கிறது. முருகனுடைய அழகையும், பெருமையையும், பராக்கிரமத்தையும், கருணைச் செயல் களையும் விரித்துரைக்கிறது. புராணமாகப் படிக்க விரும்பாதவர் களும் இதைத் தமிழின்பத்துக்காகவே படித்து நலம் பெறலாம். பக்தி உடையவர்கள் படித்தால் அவர்களுடைய பக்தி மிகுதியாகும். பற்பல நீதிகளையும் இந்த நூலால் தெரிந்துகொள்ளலாம். இறைவன் திருவருளால் ஒருவாறு இதைச் சொல்லி நிறைவேற்றுகின்ற பேறு அடியேனுக்கு கிடைத்தது. முருகன் திருவருள் வாழ்க !
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/597
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை