பார்வதியின் தவம் அம்மையின் விருப்பம் திருக்கைலாசத்தில் சிவபெருமானுடன் எம்பெருமாட்டி அமர்க் திருந்தாள். அப்போது பெருமானைப் பார்த்து உமாதேவி பேச ஆரம்பித்தாள். "எம்பெருமானே, நான் தட்சன் மகளாகப் பிறந்து தாட்சாயணி என்ற பெயரோடு இருந்தேன். என்னுடைய தந்தை யாகிய தக்கன் தேவரீருக்கு மாமனாராக இருந்தும் தங்களுடைய பெருமையை நன்கு உணரவில்லை. நீங்களே தலைவர் என்பதை அறிந்துகொள்ளாமல், உங்களை அழைக்காமல், ஒரு யாகம்செய்தான். தேவர்களை எல்லாம் அழைத்தான். அவர்களும் அங்கே வந்தார்கள். உங்களுடைய பேச்சைக் கேட்காமல் நான் அந்த யாகத்திற்குச் சென்றேன். அங்கே உங்களை அவமதித்தார்கள். இத்தகைய அவமானத்தோடு நான் இருப்பது மனம் பொருந்தவில்லை. என்னு டைய பெயரை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்." கற்பனை முதலிய கடந்த கண்ணுதல் தற்பர, நினை இகழ் தக்கன் தன்னிடைப் பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாதெனச் சொற்படு நாமமும் சுமந்து ளேனியான். ஆங்கதோர் பெயரையும் ஆவன்கண் எய்தியே ஓங்கிதான் வனர்த்தஇவ் வுடலந் தன்னையும் தாங்கினன்; மேல்அவை தரித்தற் கஞ்சினேன்; நீங்குவள்; அவ்வகை பணித்தி நீ என்றான். (பார்ப்பதிப் படலம், 2, 3,) [பற்பகல் வளர்ந்து அவன் பயந்த மாது என; பயந்த-பெற்ற. மேல்-இனிமேல். பணித்தி-கட்டளையிடு.) 4+
- தக்கனுடைய மகள் என்ற பெயரைச் சுமப்பதற்கு நான்
காணுகின்றேன். அவனுக்குப் பெண்ணாக இருந்த இந்த உடம்பை யும் போக்கிவிட வேண்டுமென்று நினைக்கிறேன். ஆகவே நான் இந்தச் சரீரத்தைப் போக்குவதற்குத் திருவருள் பாலிக்க வேண்டும்" என்று அம்பிகை சொன்னாள். "நாமமும்,ரூபமும் நன்றாக அமைந்திருக்க வேண்டும். மங்களமாக அமைந்திருக்க வேண்டும்.