பார்வதியின் தவம் 46 சிவபெருமான் அம்பிகையைப் பார்த்து மேலும் சொன்னான். "உனக்குப் பார்வதி என்ற திருநாமம் உண்டாகவேண்டும். இமய மலை அரசன் எல்லா மலைகளுக்கும் தலைவனாக இருக்கிறான். மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அவனுக்குப் பெண் இல்லை என்ற குறை இருக்கிறது. என்னையே மாப்பிள்ளையாக அடையவேண்டுமென்று அவன் தவம் செய்கிறான். அவனுடைய தவமும் நிரம்ப வேண்டும். அந்தத் தவம் நிரம்புவதற்குத்தான் உன் உள்ளத்தில் இந்த எண்ணம் உண்டாயிற்று. ஆகவே, உன்னுடைய விருப்பப்படி செய்யலாம்" என்று இறைவன் உத்தரவு கொடுத்தான். பார்வதியின் தோற்றம் அப்படியே அம்பிகை இமய அரசன் தவம் செய்யும் இடத்தை அடைந்தாள். அவனுடைய மனைவியாகிய மேனை அவனுக்குப் பணி விடைகளைச் செய்துகொண்டிருந்தாள். அவன் எங்கே தவம் செய்து கொண்டிருந்தானோ அந்த இடத்தில் ஒரு பூம்பொய்கையில் ஒரு தாமரை மலர்ந்திருந்தது. அந்தத் தாமரையில் அம்பிகை ஒரு குழந்தையாகத் தோன்றினாள். ஒருவனுடைய வயிற்றிலே வளர்வது தெய்வத் தன்மைக்கு மாறானது. ஆதலால் அம்பிகை தாமரையில் குழந்தையாகத் தோன்றினாள். மெய்த்தவம் இயற்றிய வெற்பள் காணிய அத்தடம் மலரும்ஓர் அரவித் தத்தின்மேல் பைத்ததோர் குழவியின் படிவத் துற்றனள் எத்திறத் துயிரையும் ஈன்ற தொன்மையாள். (பார்ப்பதிப் படலம், 21.) (வெற்பன் - இமய அரசன். காணிய -காணும்படி. பைத்தது - பசுமையானது.] எல்லா உயிர்களையும் தான் ஈன்று வளர்க்கிற பெருமாட்டியாகிய அம்பிகை இமய அரசனும், மேனையும் வளர்ப்பதற்கு ஏற்றபடி ஒரு சிறு குழந்தையாக எழுந்தருளினாள். வடமொழிக் காந்தபுராணத் தில் நீல ஒளி படைத்த ஒரு சுடராக அம்பிகை தோன்றினாள் என்று இருக்கிறது.தவம் நிறைவுபெற்ற இமாசல ராஜன் தன் தவத்தின் பயனால் அம்பிகை தோன்றியிருக்கிறாள் என்று எண்ணி, மகிழ்ந்து வந்து வணக்கம் செய்து அம்பிகையின் அற்புதமான காட்சியைக் கண்டான். அந்தக் காட்சியில் ஈடுபட்டபோது அம்பிகை. தன்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை