பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதியின் தவம் 49 பதவி வகிக்கிறவன். அந்தக் கார் மிகப் பெரிய சாலையில் போகும். அவனுடைய இளம் பருவத்தில் அவனோடு பயின்ற ஒருவன் ஒரு சிறு குடிசையில் வாழ்கிறான். அந்தக் குடிசைக்குள் போகவேண்டு மானால் குனிந்து செல்ல வேண்டும். அது ஒரு சின்னச் சந்தில் இருக்கிறது. அவன் வீட்டுக்குப் போகவேண்டுமானால் சேறும், சகதியுமாக இருக்கிற அந்தச் சந்தைக் கடந்து செல்ல வேண்டும். அதே சந்தில் குடியிருக்கிற ஓர் ஏழை அந்தக் குடிசைக்குள் நுழைந்து சென்று பேசிவிட்டுப் போகிறான். இப்படி நாள்தோறும் அவன் வந்து பேசியிருந்துவிட்டுப் போவது வழக்கம். அவனைப் பார்த்து யாரும் வியக்கமாட்டார்கள். ஆனால் பெரிய காரில் போகிற செல்வன் தன்னுடைய இளமைப் பிராயத்து நண்பனைப் பார்ப்பதற்காக அந்த ஊருக்கு வருகிறான். பெரிய சாலையில் காரை வீட்டுவிட்டு, சந்திலே நடந்து வருகிறான். மெல்ல மெல்லக் குனிந்து அந்தக் குடிசைக்குள் செல்வதைப்பார்க்கிறவர்கள் வியக்கிறார்கள்; அவனது உண்மையான அன்பைக் கண்டு பாராட்டுகிறார்கள். மிக மிகச் சிறந்த நிலையில் இருக்கிற அவன் தன்னுடைய நண்பனைக் காண்பதற்காகத் தன்னுடைய : காரையும் விட்டுவிட்டுச் சகதியில் நடந்து வருவது அவனது பெருமையை மிகுதியாகக் காட்டுமே தவிரக் குறைக்காது. அதேபோல் எம்பெருமாட்டி உயிர்களை எல்லாம் பாதுகாக் கிறாள். என்றாலும் இமாசல ராஜனுக்கு அனுக்கிரகம் பண்ணுவ தற்காகத் தானே அவனுக்கு ஒரு குழந்தையாக எழுந்தருளினாள். இது அவளுடைய கருணையைக் காட்டுகிறது. உயிரும் உடலும் உயிர்க் கூட்டங்களைக் காப்பதற்கு அம்பிகை தானே நாடகங் களை ஆடுகிறாள். இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்களுக்குச் சரீரம் முதலியவற்றைக் கொடுத்து இயங்கச் செய்கிறாள்.உயிர்கள் எப் போதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஜீவ யாத்திரை என்று அதனைச் சொல்வார்கள். ஓர் ஆற்றில் கூர்மையாக இருக்கிற கற்கள் நீரோட்டத்தில் கலந்துவிடுமானால் அவற்றின் முனைகள் மழுங்கிக் கூழாங்கல் ஆகிவிடும். இந்தப் பிரபஞ்சமாகிய ஆற்றில் தனு கரணங்களைப் பெற்று வந்த உயிர்கள் வாழ்க்கையாகிய நீரோட் 7