50 கந்தவேள் கதையமுதம் டத்துடன் ஓடி ஓடி இன்பதுன்பங்களை நுகர்ந்து அவற்றின் முனைப்புகள் எல்லாம் மழுங்கிவிடும். ஆனால் எல்லோரும் அப்படி ஆகிறார்களா என்பது வேறு விஷயம். பிரபஞ்சச் சேற்றிலேயே ஆழ்ந்துவிடுகிறவர்களே பெரும்பாலோர். 1 பிரபஞ்சத்தை உண்டாக்குகின்ற பெருமாட்டி இந்த உடம்பை யும் உண்டாக்குகிறான். பிரபஞ்சத்திற்கு அண்டம் என்று பெயர். இந்த உடம்புக்குப் பிண்டம் என்று பெயர். அண்டத்தில் இருப் பது பிண்டத்திலும் உள்ளது' என்று சொல்வார்கள். அண்டம் என்பது ஐந்து பூதங்களால் ஆனது. உடம்பும் ஐந்து பூதங்களால் ஆனது. மகாபூதங்களால் ஆனது அண்டம் என்று சொல்கிறார்கள். அவற்றின் சிறு பகுதிகளினால் இந்த உடம்பு அமைந்தது. பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களின் சிறு சிறு பகுதிகளினால் இந்த உடம்பு ஆகியது; அவற்றின் முழுச் சொரூ பத்தினால் பிரபஞ்சம் ஆகிறது. உயிர்களுக்குச் சரீரம் வேண்டுமென்று சொன்னேன். சரீரம் என்பது ஒன்றல்ல. நாம் பார்க்கிற இந்தச் சரீரத்தை ஸ்தூல சரீரம் என்று சொல்வர். இது பரு உடல். இதன் உள்ளே உள்ள உடல் ஒன்று இருக்கிறது. அதுதான் இன்ப துன்பங்களை அனுபவிப்ப தற்கு இன்றியமையாதது. பரு உடல் மாத்திரம் இருந்தால் போதாது. மன உணர்ச்சியோடு இருந்தால்தான் இன்ப துன்பங் களை அனுபவிக்க முடியும். ஒருவனுக்கு மயக்க மருந்து கொடுத்து டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்கிறார். அவன் உடம்பிலுள்ள பகுதியை அறுக்கிறார். அதனால் உண்டாகிற துன்பத்தை அவன் உணர்ந்து கொள்வதில்லை. சிறிய முள் குத்தினாலும் துள்ளிக் குதிக் கின்ற அவன் கத்தியினால் கீறும்போது வலியை உணராமல் கிடக் கிறான். அவன் உடம்பு பிணம்போலக் கிடக்கிறதே தவிர அவனுக்கு உயிர் இருக்கிறது. இருந்தாலும் அதனால் துன்பம் இல்லை. துன்பத்தை உணர்வதற்குறிய மனம் இப்போது உடம்போடு ஒட்டா மல் மயங்கி நிற்கிறது. மயக்க மருந்து இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறது. மனம் ஒட்டாமல் இருந்தால் இன்ப துன்ப அநுபவங்கள் இல்லை. அதே மாதிரி உடம்போடு சம்பந்தம் இல்லாமலேயே மனம் இன்ப துன்பத்தை அநுபவிக்கும். உடம்பு சும்மா படுத்துக் கிடக்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/70
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை