பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதியின் தவம் 55 உமா என்பது மிகச் சிறந்த திருநாமம். அதைச் சக்திப் பிரணவம் என்று சொல்வார்கள். பிரணவத்தில் அகார, உகார, மகாரம் உண்டு. அந்த மூன்றும் சேர்ந்தே ஓங்காரமாயின. அந்த மூன்றுமே உகாரம், மகாரம், அகாரம் என்ற முறையில் சேர்ந்து உமா என்று ஆயின. தாயும், தந்தையும் தடுத்தவுடன் அவர்களைப் பார்த்துப் பிராட்டி சொன்னாள்: "நீங்கள் என்னைப் பாதுகாப்பதாக நினைக்க வேண்டாம். எல்லோரையும் பாதுகாக்கின்றவன் ஆண்டவன். அந்தப் பரமேசுவரன் என்னையும் காப்பான். யாரும் பிறரைக் காக்க முடியாது. இறைவன் திருவருள் இருந்தாலன்றி எந்த வித மான பாதுகாப்பும் யாருக்கும் உண்டாகாது. இதுதான் உண்மை. நான் தவம் செய்யப்போவதை மறுக்க வேண்டாம்" என்று உமாதேவி மிகவும் உறுதியாகக் கூறினாள். அதைக் கேட்டவுடன் "உன் உள்ளப்படியே நீ போய்த் தவம் செய்வாயாக" என்று அன்னை சொன்னாள். ஈசனே காப்பன் அல்லால் யாரையும் பிறரால் தம்மால் ஆசறப் போற்றல் ஆகா ததுதுணி வாகும்; ஈண்டுப் பேசிய திறனும் அன்னோன் போருள்; மறாதி என்ன, தேசமோ டியைந்திட் டன்னை நினைந்தநோன் பியற்று கென்றாள். (பார்ப்பதிப் படலம், 32.) 1 (ஆசு அற - குற்றம் அறும்படி. போற்றல் - பாதுகாத்தல். மறாதி - மறுக்காதே.) உமாதேவி இவ்வாறு தவக் கோலம் கொண்டு தவம் செய்ய வந்தாள். அப்போது சிவபெருமானும் தவக்கோலத்தை ஏற்றான். தட்சிணா மூர்த்தி. அகப்பொருளில் ஒன்று சொல்வார்கள். தலைவனும் தலைவியும் எல்லாப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டும் என்பார்கள். இங்கே அம்பிகை தவம் செய்ய, பரமேசுவரனும் தவம் செய்யத் தொடங்கி னானாம். அம்பிகை தவம் செய்வதற்குக் காரணம் இறைவனைத் தன் கணவனாக அடையவேண்டுமென்பதற்காக. சிவபெருமான் எதற் காகத் தவம் செய்தான்? சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் பிரம்மதேவனின் புதல்வர்கள். அவர்கள்