பார்வதியின் தவம் 61 உலகத்து எல்லா உயிர்களும் போகங்களைப் பெறவேண்டு மானால் ஆண்டவன் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் சும்மா இருந்தால் உயிர்க் கூட்டங்கள் எல்லாம் சும்மா இருந்து விடும். எல்லா உயிர்களிடத்தும் உயிராக இருக்கிறவன் ஆண்டவன். ஆதலின் அவனுடைய இயக்கத்தால் எல்லா உயிர் களும் இயங்குகின்றன. அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்ற பழமொழியே இதனைத் தான் சொல்கிறது. இந்திரன் செயல் " இப்படி நிகழ்வதற்கு முன்னாலே ஒரு காரியம் நிகழ்ந்தது. சூரபன்மாவின் கொடுமையினால் இந்திராதி தேவர்கள் மிகவும் துன்புற்றார்கள்.பலர் சிறையில் அகப்பட்டார்கள். மேருமலையை அசுரர்கள் அடைய முடியாது. அடைந்தால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற சாபம் இருந்தது. அசுரர்கள் வர முடியாத மேருமலையைச் சுரர்கள் அடைந்தார்கள். அவர்களுக்குப் பாதுகாப் பான இடமாக அது விளங்கியது. சுரர்கள் இருந்தமையினால் சுராலயம் என்ற பெயர் அதற்கு வந்தது. இந்திரன் முதலிய தேவர்கள் தங்களுடைய பழைய நிலை கெடவே, அசுரர்களுக்கு அஞ்சி அங்கு இருந்தார்கள். ஆண்டவனை நோக்கித் தவம் செய்தார்கள். எம்பெருமான் தோன்றி, "ஏன் தலம் செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "சூரனுடைய கொடுமையால் மிகவும் இன்னலை அடைகின்றோம். பல தேவர்கள் அவனுக்கு அடிமை வேலை செய் கிறார்கள். என்னுடைய மகனாகிய சயந்தன் சிறையில் இருக்கிறான். இந்தத் தொல்லைகள் எல்லாம் நீங்குவதற்குத் தேவரீர் அநுக்கிரகம் பண்ண வேண்டும்" என்று வேண்டினான் இந்திரன். அப்போது இறைவன், "நான் சூரபன்மாவுக்கு வரம் தந்திருக்கிறேன். வரம் தந்தவனே அவனை அழிக்கக்கூடாது. தான் வளர்த்த தோர் நச்சுமாமர மாயினும் கெடார்'.ஆனாலும் உங்களுடைய தவத்திற்கு இரங்கி ஒரு காரியம் செய்கிறேன். என்பால் ஒரு குமாரனைத் தோற்றுவித்து அந்தச் சூரனைச் சங்காரம் செய்ய வைக்கிறேன்" என்று அருள் புரிந்தான். அதோடு ஓர் உண்மையை உணர்த்தினான். அவர்கள் இவ்வாறு துன்பம் அடைவதற்குக் காரணம் இன்னது என்பதைச் சொன்னான்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/81
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை