பார்வதியின் தவம் 65 மன்மதன் செயல் இறைவன் கைலாயத்தில் மோன நிலையில் வீற்றிருப்பதற்கு முன்னால், நந்தியெம்பெருமானிடத்தில், "உள்ளே யாரையும் விடாதே" என்று சொல்லியிருந்தான். மன்மதன் வந்தால் 7 மட்டும் வீட்டுவிடு ' என்று உத்தரவிட்டிருந்தான். ஆகவே. மன்மதன் கைலாயத்தை அணுகி, நந்தியெம்பெருமானிடத்தில் விடைபெற்று உள்ளே போனான். எம்பெருமான் தவக் கோலத் தோடு வீற்றிருந்தான். அவனுடைய கையில் மழுவாயுதம் இருக்கும்.இப்போது அதற்கு வேலையில்லை. மோன முத்திரை யோடு இறைவன் எழுந்தருளியிருக்கிறான். அம்பு விடுவதற்கு இலக்கத்தை நாடுவதுபோல மன்மதன் எம்பெருமானை நினைத்து. ஐந்து மலர் அம்புகளை விட்டான். சாகத் துணிந்தவனுக்குச் சமூத்திரம் முழங்கால்மட்டும் என்பார்கள். அழிந்து போவோம் என்று அறிந்த அவன், தன் மலர் அம்புகளை இறைவன்மேல் விட்டான். மணமும், நிறமும் பொருந்திய மலர் ஐந்தும் இயற்கையில் மிக மிக மென்மையாக இருப்பவை. ஆனால் மன்மதன் கையில் உள்ள அவை ஐந்தும் காமத் தீயை உண்டாக்கும். நல்லவர்கள் கூடத் தீயவர்களிடத்தில் சேர்ந்து தீமையை விளைவிப்பார்கள் என்பதற்கு இது சான்று. மன்மதன் கையில் தாமரைப் பூ, மாம்பூ, அசோகு, முல்லை, நிலோற்பவம் என்ற ஐந்து அம்புகள் இருக்கின்றன. தாமரை மலரை விட்டால் காதலுக்கு உரியவரை நினைக்கச் செய்யும். மாம்பூவை விட்டால் பசலை உண்டா கும். அசோக மலர் எல்லா உணர்வுகளையும் போக்கும். முல்லை மலரால் செயலிழந்து கிடப்பார்கள். நீலோற்பலம் உடலை விடச் செய்யும். இப்படி ஐந்து மலர் அம்புகளுக்கு ஐந்து வகையான விளைவுகளை இலக்கண நூல் சொல்கிறது. மன்மதன் ஐந்து வாளி களையும் ஒரு சேர எம்பெருமான் மேலே விட்டான். உலகத்திலுள்ள உயிர்க்கூட்டங்களின் மேல் காமன் அம்புகளை விட்டால் அவ்வுயிர்கள் மயக்கத்தை அடையும். மன்மதன் பாணத்தால் அவதியுறாதவர்கள் யாரும் இல்லை.இறைவனே ஞான மூர்த்தி. அந்தப் பெருமான் மன்மதனுடைய ஐந்து மலர் அம்புகள் பட்டவுடன் சற்றே நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தான். அவன் மலம் இல்லாத விமலன். 9
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை