பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்வதியின் தவம் 67 இது சுந்தர் ஆலங்காரம். முருகப்பெருமானுடைய திருவருள் இருந்தால் காமத்தினாலே துன்புற வேண்டிய நிலை இராது. அழிவும் ஆக்கமும் ஆண்டவனது நெற்றிக் கண் மாரனைச் சுட்டது; குமாரனைத் தோற்றுவித்தது. ஒன்றை அழிப்பதற்கும், மற்றொன்றை ஆக்கு வதற்கும் ஒரே கண் உதவுகிறது. இது பொருத்தமாக இருக்குமா என்று கேட்கலாம். திருவள்ளுவர் சொல்கிற பாட்டு ஒன்று இங்கே நினைவுக்கு வருகிறது. அன்பு உள்ளவர்களுக்கும், இல்லாதவர் களுக்கும் உரிய வேறுபாட்டை அவர் காட்டுகிறார். அதற்கு முன்பு ஒரு கதை சொல்கிறேன்./ வைகுண்ட ஏகாதசி அன்று ஓர் ஏழைக் கிழவி பலகாரத்திற்கு உப்புமாச் செய்ய ரவை யை எடுத்தாள். எப்போதோ வாங்கி டப்பாவில் கொட்டி வைத் திருந்த ரவை அது. அதில் புழு இருந்தது. அதை முறத்தில் கொட்டி, சிறிது வெயிலில் காய வைத்தாள். காக்கை கொத் துமே என்று தன் பேரனை அழைத்து அதற்குக் காவலாக இருக்க வைத்தாள். பையன் வெயிலில் சுகமாக உட்கார்ந்து குளிர் காய்ந் தான். மார்கழி மாதமாதலால் அந்த வெயில் அவனுக்கு இதமாக இருந்தது. அதே சூரிய கிரணங்கள் ரவையில் இருந்த புழுவின் மேலும் பட்டன. அந்தக் கிரணங்களைத் தாங்க முடியாமல் புழுக்கள் சுருண்டு சுருண்டு செத்துப் போயின. பையனுக்கு இதமாக இருந்த சூரிய கிரணங்களே புழுக்களுக்கு வதமாக இருந்தன. சூரியன் பையனுக்கு ஒரு வகையான கிரணங்களையும் புழுவுக்கு வேறு வகை யான கிரணங்களையும் வீசினான் என்று சொல்லலாமா? இரண்டு பேருக்கும் ஒரே வகையான கிரணங்களைத்தான் வீசினான். ஆனால் புழு இறந்தது. அந்தச் சூரியனுடைய கிரணங்களைத் தாங்கும் எலும்பு அதற்கு இல்லை. பையனுக்கோ எலும்பின் வலிவு இருந்த மையினால் அந்தக் கிரணங்கள் இதமாக இருந்தன. வலிமை உள்ள வனுக்கு இதமாக இருக்கிற கிரணமே வலிமையற்றதற்கு வதமாக இருக்கிறது. அது போல் அன்பு உள்ளவர்களுக்கு அறக்கடவுளின் செயல் நன்மையைத் தருகிறது. அது இல்லாதவர்களுக்குத் துன்பத்தைத் தருகிறது.