74 41 லும் நான் கந்தவேள் கதையமுதம் ஐயா, எம்பெருமான் எனக்கு அருள் செய்யாமல் இருந்தா தவத்தை விடமாட்டேன். இன்னும் கடுமையான தவத்தை மேற்கொள்வேன். என் உயிர் போனாலும் தவம் செய் வதை மாற்றமாட்டேன். நீர் அதிகமாக முதுமை அடைந்து மயக்கத்தைக் கொண்டீர். நீர் பித்தரோ?" என்று கேட்டாள். முடிவி லாதுறை பகவனென் வேட்கையை முடியாது விடுவன் என்னினும் தவத்தினை விடுவனோ ? மிகஇன்னம் கூடிய நோன்பினை அளப்பில செய்துயிர் கழிப்பேன்நான்; நெடிது மூத்தலின் மயங்கினை ; பித்தனோ நீஎன்றாள். {தவங்காண். 12,) தவம் பல வகை ஏதேனும் ஒரு பொருளை எண்ணிச் செய்கிற தவத்திற்குக் காமியத்தவம் என்று பெயர். இறைவன் அருள் செய்வான் என்று எண்ணி அதற்காகத் தவம் செய்வது உயர்ந்தது. இறைவன் அருளாவிட்டாலும் அவனை நினைந்து தியானித்துத் தவம் செய்வதே கடமை என்று இருப்பது மிக உயர்ந்த பண்பு. "இடர்களையா ரேனும் எமக்கீரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும்-சுடர்உருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பன தென்னெஞ் சவர்க்கு' (தற்புதத் திருவந்தாதி ) என்று காரைக்கால் அம்மையார் இந்த நிலையில் இருந்து சொல் கிறார். உண்மையான பக்தர்கள் இறைவனிடம் பக்தி செய்வதனால் ஒரு பயன் உண்டு என்று எண்ணமாட்டார்கள். சேக்கிழார் பெரிய புராணத்தில் நாயன்மார்களின் இயல்பு களைப் பொதுவாகத் தொகுத்து, திருக்கூட்டச் சிறப்பு என்ற பகுதி யில் சொல்கிறார். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார், கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்" என்று பாடுகிறார், அந்த அன்பர்களுக்குச் செல்வத்தில் ஆசை இல்லை. பதவியில் ஆசை இல்லை. இறைவனிடத்தில் அன்பு செய்து எப்போதும் வாழ்பவர்கள். அப்படி வாழ்வதையே இன்பு
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/94
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை