78 கோவில் கந்தவேள் கதையமுதம் ஆண்டவனுக்குக் காடே நடம் புரியும் இடம் என்று முதியவன் சொல்கிறான். "கோயில் சுடுகாடு" என்று மாணிக்கவாசகரும் பாடுகிறார். எத்துணையோ வகையான கோவில்கள் இருக்க, இறைவன் மயானத்தை இடமாகக் கொள் வானேன் என்ற கேள்வி நமக்குத் தோற்றுகிறது. இறைவனை நாம் கோவிவில் கும்பிடுகிறோம். எங்கும் இறைவன் எழுந்தருளியிருக்கிறான். அவன் இல்லாத இடம் இல்லை. எள்ளுள் எண்ணெயைப்போலச் சர்வாந்தர்யாமியாக அவன் விளங்கு கிறான். பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்றவன். 'அப்படி இருக்க அவனுக்கு என்று தனியே ஒரு கோவில் வைத்து அங்கே போய் நாம் கும்பிட வேண்டுமா?" என்று சிலர் எண்ணுவது உண்டு. உண்மையில் ஆண்டன் எங்கும் இருக்கிறான் என்ற உணர்வு எல்லோருக்கும் இருப்பதில்லை.மிகப் பெரியவர்களே உணர்ச்சி பூர்வமாக அதை உணர்கிறார்கள். கனகதாசர் என்ற பெரியவர் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் இளமையில் ஒரு குருநாதரை அணுகித் தமக்கு உபதேசம் பண்ண வேண்டுமென்று கேட்டார். அந்தக் குருநாதர் கனகதாசரின் தகுதியை உணர்வதற்காக அவருடைய கையில் ஒரு கனியைக் கொடுத்து,"இதை யாரும் இல்லாத இடத்தில் நீ போய்ச் சாப்பிடு" என்று சொன்னார். அதை வாங்கிக் கொண்ட கனகதாசர் இரண்டு நாள் வரையில் அதைத் தம் கையிலே வைத்திருந்தார். பிறகு அதைக் கொண்டு வந்து குருநாதரின் திருவடியிலே வைத்து, "இதை என்னால் சாப்பிட முடியவில்லையே ! தேவரீர் நான் இதை யாரும் இல்லாத இடத்தில் உண்ண வேண்டுமென்று கட்டளையிட்டீர்கள். அப்படி ஓர் இடம் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லையே !" என்றார். "யாரும் இல்லாத இடமே உனக்குக் கிடைக்க வில்லையா? ஏதேனும் ஓர் அறைக்குள் தனியாகச் சென்று உண்ணக் கூடாதா?" என்று கேட்டார் குருநாதர்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/98
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை