பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஷ்டி விரதம் {}9.

ஆடுமயில்’ என்பதை அறிந்தோம். மயில் தன்தோகையை விரித்த நிலையில் முருகன் அதில் விளங்கும் தோற்றத் தைக் கண்டால், மயில் பிரணவம் போல் விளங்க, அதன் இடையே குமரன் பிரணவ நாதன் என்பதையும், ರ್ಡ್ಗಶಿಸr அன்றிப் பிரணவமே இல்லை என்பதையும், வேறு. மந்திரங் களும் இல்லை என்பதையும் முருகன் உணர்த்தி நிற்புதை உணரலாம். இதன் குறிப்பைச் சிதம்பர சுவாமிகள். செறி கலப மயில் முதுகில் உதய சின்மய தூய" என்றருளிச் செய்தனர்.

சேவல்நாத தத்துவத்தின்அறிகுறி. சேவல்எப்படிஉயர ஏறிக் கூவி, இருளே ஒழிக்கச் சூரியனை வருகஎன அழைக் கவும் மக்களை விழிப்பித்து அவர் அவர் பணியில் ஈடுபடவும் செய்கிறதோ, அது போல முருகன் திருக்கரச் சேவல் அன் பர்களின் அஞ்ஞான இருளைப் போக்கி மெய் ஞானமாகிய ஒளியினில் செறிய ஒலியிடும் நிலையில் இருப்பது என் பதைக் காட்டவே சேவலைத் திருக்கரம் கொண்ட கோல மாகும். பிறப்பாகிய தூக்கம் அறவும் அது கூவும் இயல் பினது. இதனையும் சிதம்பர சுவாமிகள்.

மலஇரவு விடிய மிகுதுறவுணர்வு நசையறுதன்

மலிகுணக் குன்றின் முடிமேல்

மன்று ஞானக்கதிர் எழுந்தொளிபரப்பமா

ருது தசநாத முழுதும்

அலகில் பவதுயில் அறக் கூவுசேவல்

என்று பாடி அருளினர்.

இத்துணைக்கும் காரணமாகிய சஷ்டிநாளை நாம் விரத நாளாகக் கொண்டு நம்பகையை வென்று குமரனைப் போற்றி வாழ வேண்டியது கடமை அன்ருே? ஆகவே, நாமும் கந்தவேள் விர தமாம் கந்தர் சஷ்டி விரதத்தை மேற்.