பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

இவ்வாறு இருக்க, ஏன் இறைவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வினவவும் கூடும். இதற்கு விடையாக மணி மொழியார் அழகிய முறையில்,

தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ

என்றும்,

மலையரையன் பொற்பாவை வாள் நுதலாள் பெண் திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடி உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்தும் கலநவின்ற பொருள்களெலாம் கலங்கிடும்காண் சாழலோ

என்றும் உணர்த்தியுள்ளார். இந்த உண்மைகளை அறிந்தே நாம் இறைவனுக்கு ஆண்டு தோறும் திரு மணங்களை நடத்தி நாம் மங்களமாக இருக்க வழி வகுத்துக் கொள்கிருேம். அவனே வாழ்த்துவதும், வணங்குவதும் கூட நம் பொருட்டேயாகும். இதனை மணி மொழியார் தேவர்கள் மேல் வைத்து, 'வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி’ என்று பாடியருளினர். எனவே, முருகப் பெருமானும் நம்மை ஆட் கொள்ளவே தெய்வயானை யாரைத் திருமணம் முடித்துக் கொள்கின்ருர். இனி அத் திருமணச் சிறப்பைச் சிறிது பேசுவோமாக.

முருகப் பெருமான் திருமணம் கண்டு இன்புற்று இன் னருள் பெற விண்ணவர்களும் மண்ணவர்களும் திருப்பரங் குன்றம் நோக்கி வரலாயினர். வரும் வழியிலேயே அவர்