பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

பெருமான்தன் வாழ்க்கைத் துனேவியாம்தெய்வயானையுடன் அம்மையப்பனது அடிமலர் இணைகளில் வீழ்ந்து வணங் கினன். இறைவனும் இறைவியும் மகிழ்ந்து,

அடித்த லத்தில்வீழ் மக்களை இருவரும் ஆர்வத் தெடுத்த ணைத்தருள் செய்துதம் பாங்கரில் இருத்தி முடித்த லத்தினில் உயிர்த்துமக் கெம்முறும் முதன்மை கொடுத்தும் என்றனர் உவகையான் மிக்ககொள்

கையினர்

ஆயினர். அதன்பின் முருகனும் தேவகுஞ்சரியும் அளவிலா இன்பத்துள் மூழ்கித் திளைத்தனர். இதனை

இன்ன தன்மைய தாகவே எம்மையின் றெடுத்த அன்னை தன்னுடன் ஆறுமுகன் உறையுளின் அடைந்து பொன்னின் மஞ்சமேல் படுத்துமெல் லமளியில் புவனம் மன்னு யிர்த்தொகை உய்ந்திட முயங்கிவை கிளுன்

என்ற திருப்பாடலில் காணவும்.

முருகன் தெய்வயானையுடன் கூடி இன்புற்றது தனக்கு இன்பமாதற் பொருட்டு அன்று என்பதை நாம் நன்கு உணரவே கச்சியப்ப சிவாசாரியார் உயிர்த் தொகை உய்ந்திட முயங்கிவைகினன் என்று முடித்துக் காட்டினர். இறைவன் போகியாக இருந்து காட்ட வில்லை என்ருல் உயிர்கள் போகத்தைத் துய்க்க முடியாது. இந்த உண்மை யிஜன இறைவன் தட்சணுமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு உபதேசம் புரிகையில் யோகத்தில் அமர்ந்த காலத்தில் மன்மதன் இருந்தும் கூட எவ்வுயிரும் போகத் தில் இச்சையின்றியே கிடந்தன. இதனைச் சைவ எல்லப்ப நாவலர் தெள்ளத் தெளிய,