பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவகுஞ்சரி திருமணம் f07

எல்லா உயிர்க்கும் உயிர்அருணேசர் இவர் அசையின் அல்லாது அணுவும் அசையா தென்பது அறிந்தனமே வில்லாடன் மாரன், இருக்கவும் யோகம்விளைத்த அந்நாள் புல்லாதிருந்தன எல்லாவுயிரும் தம்போ கத்தையே

என்று பாடியருளினர். 'காண்பார் ஆர் கண்ணுதலே நீ காட்டாக் காலே’ என்பது அப்ப்ர் பெருமாளுர் அருள் வாக் கன்ருே?

ஆகவே, முருகப் பெருமானும் இறைவனில் வேறு அல் லன் ஆதலின், உயிர்கள் இன்புற தேவகுஞ்சரியுடன் இ8ணந்து இன்புற்றனன். இந்தத் தெய்வயானைத் திரு மன்த்தின் சிறப்பைக் குமர குருபர சுவாமிகள், பாடி மழ்ந்தனர். இதனையே நாமும்பாடி மகிழ்வோமாக,

அபாடல்

மழைக்கொந் தளகக்கலப மயில் இளஞ் சாயல்நெடு

மதர்அரிக் கெண்டையுணகண் மான்கன்றை அமருலகு வாழப் பிறந்திடும்

மடப்பிடியை வானவில்லை குழைக்கும் தடக்கைத் திருத்தாதை நீரொடு

கொடுப்பக் குடங்கை ஏற்றுக் கொழுமலர் மணங்கமழ் மணப்பந்தர் நிற்பஅக்

கொம்புமின் கொடியின் ஒல்கி இழைக்கும் பசும்பொன் தசும்பெனஅ சும்புபொன்

துளிப்பது போன்று இளமுலை முகம் கோட்டி நின்று எய்யாமை நோக்கும் படைக்கண் கடைக்கண் நோக்கும்

இன்னமுதம் ஊற்ற இன்பம் தழைக்கும் பெருங்காதல் வெள்ளம் திளைத்தவன்

சப்பாணி கொட்டி அருளே தையல்நாயகி மருவு தெய்வநாயகன் மதலை

சப்பாணி கொட்டி அருளே என்பது