பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் பெருமை 11

எனவே, இதுவரை எடுத்துக் காட்டிய ஏதுக்களால் பெருமைக்குரிய முருகனது மாண்பு சீரியது என்பதை அன்பர்களின் வாக்காலும் அரிபரந்தாமன் அரிய உரை யாலும் உணர்ந்தனம். ஆல்ை, ஒரு சில அன்பர்கள் முருகனது அடியார்கள் ஆதலாலும், திருமால் மாமனர் ஆதலாலும், முருகன் பெருமையினை மொழிவதில் அத் துஜன ச்சிறப்பில்லேயே என்றும் கூறக்கூடும்; கருதவும் கூடும். இதே நேரத்தில் முருகப் பெருமானுக்கு நேர்பகை வர்களும் முருகனது பெருமையினை அறிந்து போற்றிப் புகழ்ந்துள்ளனர் என்பதை எடுத்துக் காட்டினல், முருகன் பெருமை முற்றிலும் பெருமைக்குரியது என்பது பெறப் படும் அன்ருே!

இரணியன் என்பவன் சூரபதுமன் குமாரர்களில் ஒரு வன். அவன் முருகனது பெருமையினை உணர்ந்து, தன் தந்தையை நோக்கி,

ஆறுமுகத் தொருவன் ஆகும் அமலன அரன்பால் வந்த சிறுவன் என் றிகழன் மன்ன செய்கையால் பெரியன்

கண்டாய் இறுதிசேர் கற்பம் ஒன்றின் ஈறிலா தவன்பால் தோன்றும் முறுவலின் அழலும் மன்றே உலகெலாம் முடிப்பதம்மா வாசவன் குறையும் அந்தண் மலரவன் குறையும் மற்றைக் கேசவன் குறையும் நீக்கிக் கேடிலா வெறுக்கை நல்க

ஆசில்ஓர் குழவி போலாய் அறுமுகம் கொண்டான்

எண்டோள்

ஈசனே என்ப தல்லால் பிறிதொன்றை இசைக்க லாமோ என்றனன்.

இவ்வாறு இரணியன் இறைவனம் முருகனது பெருமை யினை எடுத்து இயம்பியதையும் ஏற்காத நிலையில் ஒரு சிலர் இருக்கலாம். ஏன்? இரணியன் சிறுவன்; அவன்