பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலின் சிறப்பு

பாம்பன் சுவாமிகள் "அரன்பால் படை அரசை வாங் கினன்' என்று பாராட்டுகின்றர். தண்டபாணி சுவாமிகள் இவ்வேலின் மாண்பைக் குறிப்பிடும்போது, வேலாயுதத் திற்கு மேலாயுதம் என்ன வேறு இல்லையே என்றும், சத்தி படைத்தெய்வமே' என்றும் சிறப்பித்துச் செப்பியுள்ளார்! அருணகிரியார் "பழநிப்பதியில் திருஞான பூரண சத்தி தரித்தருள் பெருமாளே' என்று போற்றிப் புக்ழ்ந்துள் ளார்.

அருணகிரியார் தம் திருவாக்கின் மூலம் சத்தியாம் வேல் இன்னது என்பதை விளக்கியும் போந்தனர். அதனைத் திருஞான பூரண சத்தி என்றனர். ஆம், சத்தி ஞானமேயாகும். 'சத்திதான் தடையிலாஞானம் ஆகும்' என்பது சிவஞான சித்தியார். ஆகவே ஞானமாகிய அறிவையே முருகன் தன் திருக் காத்தில் படையாகக் கொண்டனன் என்பது புலனுகின்ற தன்ருே! இதஞல் அஞ் ஞானமாகிய இருளை அம்மெஞ்ஞான மாகிய சத்திவேல் போக்கும் என்பது, தெரியவருகின்றதன்ருே? வேல் மருளைப் போக்கி அருளை நல்கும் என்று கூறலாம் அன்ருே.

இக் கருத்தைக் கச்சியப்ப சிவாசாரியர் சூரபதுமன் சம் ஹாரத்தின் மூலம் நமக்கு நன்கு விளக்கிக் காட்டியுள்ளார்.

ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர் ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித் தீயழல் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட மாயிருள் உருவம் முற்றும் வல்விரைந்து அகன்றதன்றே என்றும,

விடம்பிடித்து அமலன்செங்கண் வெங்கனல்உறுத்திப்பானி இடம்பிடித் திட்ட தீயில் தோய்ந்துமுன் இயற்றிஅன்ன உடம்பிடித்தெய்வம் இவ்வாறு உருகெழு:இத்து தம்

மடம்பிடித்திட்ட வெஞ்சூர் மர்முதல் தடித்ததில் என்றும் பாடிய வாற்ருல் பார்க்கலாம்.