பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

இவ்வாறு சூரனைக் கொடுமை செய்தது இவ்வேல் என்ற தல்ை, அவ்வேல் கொடுமைக்குணமே வாய்ந்ததோ என்று கருதுதல் கூடாது. இங்ங்ணம் செய்வது அதன் மாட் டுள்ள மறக் கருணையே அன்றி வேறன்று. போற்று தர்க்கு அறக் கருணை புரிந்து அல்லார்க்கு நிகரில் மறக் கருணை புரிந்து ஆண்டு கொள்ளுதல் இயல்பு என்க.

வேல் கொடுமை சான்றது என்று எண்ணுதல் கூடாது. அஃது அருள் உருவாய் அமைந்திருப்பது என்று நம்மனுேர் அறியவே கச்சியப்ப சிவாசாரியர் விழிப்புடன்,

புங்கவர் வழுத்துச் சிந்தும் பூமழை இடையின் ஏகி அங்கியின் வடிவம் நீங்கி அருள் உருக்கொண்டு

வான்தோய் கங்கையில் படிந்துமீண்டு கடவுளர் இடுக்கண் தீர்த்த எங்கள்தம் பெருமான் செங்கை எய்தி -

வீற்றிருந்த தவ்வேல் என்று அறிவுறுத்திச் சென்ருர்.

மேலும், வேல் அலங்காரம் என்னும் நூல், இதன் அரு ளின் தன்மையினையும் வடிவத் தோற்றத்தையும், திரு வருள் சத்தி வடிவான வேல் படை எண்ணில், வேதாகமங் கள் பகர்ந்த தெய்வத் துருவம் எல்லாம் அதுதான விளங் கிடும் உண்மையதே' என்று வாயார வழுத்துகிறது. இதகுல் நமது வேலை, வேலே வணங்க வேண்டுவதன்ருே? இதனையே நம் முன்னேர்கள்,

தோகை மேல்உலவும் கந்தன் சுடர்க்கரத்தில் இருக் கும் வெற்றிவாகையே சுமக்கும் வேலை வணங்குவது நமக்கு வேஐல, என்று கட்டளையிட்டுச் சென்றுள்ளார். இங்ங்னம் வேஜலப்பணியும் வேலையுடைய பெரியார்க்கும் பிறப்பில்லே என்பது ஆன்ருேர் துணிவு. இதனை 'வேற் படையைப்