பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலின் சிறப்பு 23

பேணிப் பரவும் பெரியார்க்குப் பின்னைப் பிறப்பில்லையே' என்ற அடி விளக்கி நிற்கிறது.

வேல் என்னும் மொழியின் பொருள் வெல்லும் பண் பைப் பெற்றது என்பது இருந்தாலும், அச்சொல் லுக்கு மற்றும் ஒரு பொருள் சீரிய முறையில் பொருந்தி யுள்ளது என்பது சீவக சிந்தாமணிப் பாடலால் தெரிய வருகிறது.

வீழ்ந்து மயில்போல் விசயைக் கிடந்தாளைத் தாழ்ந்து பலதட்பம்தாம் செய்து வேல் பெற்றுப் போழ்ந்த கன்ற கண்ணுள்புலம்பா எழுந்திருப்பச் சூழ்ந்து தொழு திறைஞ்சிச் சொன்னர் அவன்திறமே என்பது அச் செய்யுள். இதில் வரும் 'வேல் பெற்று' என்னும் தொடர்க்கு விளக்கம் கூற வந்த உச்சி மேற் புலவர் கொள் நச்சிஞர்க்கினியர். உணர்ச்சி பெற்று: என்று எழுதியுள்ளார். இதனுல் வேல் உணர்ச்சி தருவது என்பதும் ஊக்கம் ஊட்டுவது என்பதும் ஆக்கம் அளிப்பது என்பதும் ஆகிய பொருள்களுக்கெல்லாம் இடமாய் இருட் பது என்பது போதருகின்றதன்ருே.

இத்துணைக்கும் பெருங் காரணமாக இருக்கும் வேல் அன்பர்களின் பொருட்டு இன்னின்ன செய்யவல்லன என் பதும் திருமுருகாற்றுப் படை என்னும் நூலில் காணும் நக்கீரர் வாக்கிலுைம் தெளியலாம்.

குன்றம் எறிந்ததும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும் பில் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல். அன்பர்களை ஆபத்தில் காக்கவே ஆறுமுகன் வேலைத் தாங்கியுள்ளான் என்பதை நக்கீரர் "வெஞ்சமரில் அஞ்சல்