பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலின் மாண்பு 27

பெருமானுக்கு ஊர்தியாக இருந்து அருமையும் பெருமை யும் நிறைந்ததாக விளங்குகிறது.

ஈண்டு நாம் ஒன்றை அறிந்து கொண்ட பிறகே மயி லின் மாண்பைப் பேச மேலே செல்லுதல் வேண்டும். முரு கப் பெருமானுக்கு உரிய வாகனமாக மயிலினைக் குறிப் பிட்டோம். மயில் ஒன்றுதான் அவனது வாகனம் என்ற ஐயம் சிலர் உள்ளத்தில் எழலாம் அன்ருே? மயில் மட்டும் அவனுக்குரிய வாகனம் என்பதில்லை. ஆம், முருகப்பெரு மானுக்கு கரியும் மறியும்கூட, அதாவது யானையும் ஆடும் கூட வாகனங்களாக அமைந்துள்ளன. யானே முருகப் பெருமானுக்கு ஊர்தியாக இருக்கிறது என்பதை நம் அருணகிரியார்,

செழுமதகரி நீல கோமள அபநவ மயில்ஏறு சேவக செயசெய முருகா கோவளர் கந்தவேளே

என்று யானையினைச் செழுமதகரி என்றும், மயிலினை அபநவ மயில் என்றும் அடை கொடுத்துப் பாடிய அழகினை நாம் உன்னி உன்னி உவகை கொள்ளுதல் வேண்டும்.

ஆறுமுகப்பெருமானுக்கு ஆடும் வாகனமாக அமைந் ததைக் கந்த புராணத் தகரேறு படலத்தால் நன்கு தெளிய லாம். (தகர்-ஆடு) நாரதர் சிவப்பிரீதியாக யாகம் ஒன்று செய்தார். அவ் யாகத்தில் ஒர் ஆடு தோன்றியது. அது யாவரையும் துன்புறுத்தத் தொடங்கியது. அதுபோது முருகப்பெருமான் அதன் கொட்டத்தை அடக்கி அதனை வாகனமாகக் கொண்டனர். அங்ங்னம் ஊர்தியாகக் கொள்ளுமாறு தேவர்களும் முனிவர்களும் வேண்டிக் கொண்டனர் என்பதும், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,அதனை ஊர்தியாகக் கொண்டனர் என்பதும்,