பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

கந்த சஷ்டி சொற்பொழிவுகள்
  அப்பன் இரத்து எண்ணி 
  ஆத்தாள் மலைநீலி
  ஒப்பரிய மாமன் 
  உறிதிருடி-சப்பைக்கால்
  அண்ணன் பெருவயிறன் 
  ஆறுமுகத் தானுங்கிக்
  கெண்ணுங்கால் பெருமை 
  இவை                என்று கூறிவிடுவர். அதனல், யானும் காளமேகப்புலவர் போக்கில் முருகனது பெருமையினைக் கூறி முடிப்பேன் என்று கருதவேண்டா.

முருகப்பெருமான் யாவன்? அவன் பெருமை எங்ஙனம் துலங்குகிறது என்பன போன்ற வினுக்களுக்கு இனி விடை காண்போமாக. முருகப் பெரு மான் இறைவனது திருமகன் என்னும் சிறப்புக் குரியவன் என்பது உங்கள் யாவர்க்கும் தெரிந்ததே ஆகும். இறைவன் இத்திறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட, ஒண்ணு நிலமை யினன் என்ருலும், அன்பர்களின் பொருட்டு உருவத்திரு மேனி கொண்டு அருளுவது அவனது கருணை உள்ளத்தின் கோட்பாடாகும். இதனைக் கச்சியப்ப சிவாசாரியர்,

  உருவொடு தொழில்பெயர் 
  ஒன்றும் இன்றியே    
  பரவிய நீஅவை பரித்து 
  நிற்பது             
  விரவிய உயிர்க்கெலாம் 
  வீடு தந்திடும்            
  கருணை யதேஅலால் 
  கருமம் யாவதே               என்று பாடித் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த அளவிலும் அவர் கூறிநிறுத்தாது,

தன்னை நேரிலாப் பரம்பொருள் தனியுருக் கொண்ட தென்ன காரணம் என்றியேல் ஐந்தொழில் இயற்றி முன்னை ஆருயிர்ப் பாசங்கள் முழுவதும் அகற்றிப் பின்னை வீடுபே றருளுவான் நினைந்த பேர்அருனே என்றும் விளக்கிப் போந்தார். இக் கருத்துக்களை நமது