பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலின் மாண்பு 81

போரையும், சேர்ந்து வாழ்மின் என்று அழைத்துச் சேர்ப் பிக்கும் தன்மையது என்பதைப் பரிபாடல் என்னும் பழம் பெருநூல் "தோகையார் குரல் மணந்து தணந்தோரை நீடன்பின் வாரும் என்பவர் சொற் போன்றனவே' என்ற அடிகளில் காணவும்.

எங்ங்னம் ஆபத்தான வேளையில் வேல் தோன்றிப் பெருந்துணை செய்கின்றதோ, அது போல மயிலும் ஆபத் தான வேளைகளில் முருகப் பெருமானைத் தன்மீது சுமந்து வந்து, அருள் செய்ய வல்லது. இதனை அருணகிரியார் வரலாற்றுக் குறிப்பின் ஒரு பகுதியினுல் அறிந்து கொள்

6aᎢ y fᎢ La .

திருவண்ணுமலையில் சம்பந்தாண்டான் என்பான் ஒரு வன் இருந்தான். அவன் தேவி உபாசகன். அதனல் ப்ார்வதி தேவியின் திருவருளேக் கைவரப் பெற்றவன். அருணகிரியார் முருகப் பெருமான் திருவருளில் தேங்கித் திழைத்தவர் என்று யான் கூறவேண்டுவதில்லை. இவ்விரு வரும் பிரபுட தேவ மகாராஜன் காலத்தவர். அவனது சபையினை அலங்கரிக்கும் புலவர்களாகவும் திகழ்ந்தனர். ஒருமுறை சப்பந்தாண்டான், தன் தனிச் செருக்கால் தானே தெய்வத் திருவருள் பெற்றவன் எனத் தற் பெருமை பேசிக் கொண்டனன். தன்னல் தேவியையும் கூடக் காட்டமுடியும் என்றும் கழறினன். அருணகிரி யார் அடக்கமாகத் தாம் ஆறுமா முகனைக் காட்டஇயலும் என இயம்பினர்.

மன்னன் இவ்விருவர் தம் உரைகளைக் கேட்டான். உடனே யார் யார் தம்தம் உபாசன முர்த்திகளை இவ்வரச சபையில் வரவழைக்கின்றனரோ, அவர்கள் தாம் பெரியவர்' என்று பகர்ந்தனன். அவ்வளவுதான், சம்பந்தாண்டான்