பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலின் மாண்பு 85

சேலில் திகழும் வயல் செங்கோடைவெற்பன் செழுங்கலவி

ஆலித் தனந்தன் பளு முடி தாக்க அதிர்ந்ததிது

காலிற் கிடப்பன மாணிக்க ராசியும் காசினியைப்

பாலிக்கும் மாயனும் சக்ராயுதமும் பணிலமுமே என்று பாடியருளினர்.

மேலும் இம்மயிலின் மாண்பினை உணர விழைவார் மயில் விருத்தம் என்னும் நூலில் பரக்கக்காண உங்களை வேண்டுகிறேன். அதில் மயிலின் சிறப்பு,

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி

யம்பக விநாயகன்முதற் சிவனவலம் வரும்.அளவிலே உலகடைய நொடியில்வருடு

சித்ரக கலாப மயிலாம்

என்றும்

சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கும் மயிலாம்

என்றும்

விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம்

என்றும்

வேலைக் வறச் சுரர் நடுக்கம் கொளச் சிறகை வீசிப் பறக்கும் மயிலாம்

என்றும்

கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி கிழிபட நடாவு மயில்

என்றும்

கொடியநிசி சரருதரம் எரிபுகுத விபுதர்பதி குடி புகுதநடவு மயில்

என்றும்